தொடர்ச்சியாக கடன் பணத்தை மட்டும் நம்பியே இருப்பது மோசமான பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கடன்கள் என்பது அவசர கால சூழ்நிலையில் நமக்கு மிகப்பெரிய லைஃப் சேவர் போல செயல்படுகிறது.
ஆனால், இதனை அளவுக்கு அதிகமாகவோ அல்லது அலட்சியமாகவோ வாங்குவது உங்களை கடன் வலைக்குள் மாட்டிவிடும். எனவே, உண்மையில் கடன் தேவைப்படும் நேரத்தில் மட்டுமே அதனை வாங்கிவிட்டு சரியான நேரத்தில் கடன்களை திருப்பிச் செலுத்துவதும் மிகவும் அவசியம்.
Also Read: ஜனவரி மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் லிஸ்ட் இதோ… உங்கள் வேலைகளை சரிபார்த்துக்கோங்க…
லோன்கள் பொதுவாக ஹோம் லோன், கார் லோன், பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் போன்ற பல்வேறு வடிவங்களில் கிடைக்கின்றன. இவை அனைத்துமே மாத தவணை முறையில் EMIஆக ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் பேமெண்ட் ஆப்ஷனைக் கொண்டுள்ளன. ஆனால், ஒருவேளை கடன் வாங்கியவர் கடனை திருப்பி செலுத்துவதற்கு முன்னரே இறந்துவிட்டால் அவருடைய கடனை திருப்பி செலுத்த வேண்டியது யாருடைய பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது.
கடன் வாங்கியவர் இறந்துவிட்டால் அவர் வாங்கிய ஹோம் லோன் என்ன ஆகும்?
ஹோம் லோனை பொறுத்தவரை சூழ்நிலை மிகவும் தெளிவாக உள்ளது. கடன் வாங்கியவர் கடன் காலத்திற்கு உள்ளாக இறந்துவிடும் பட்சத்தில் வங்கி முதலில் துணை கடன் பெற்றவரிடம் (Co-Borrower) பெற்றவரை தொடர்பு கொள்ளும். அவரே கடனை திருப்பிச் செலுத்துவதற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒருவேளை துணை கடன் பெற்றவர் இல்லாத பட்சத்தில் கடனுக்கான உத்தரவாதம் அளித்தவர் அல்லது கடன் பெற்றவரின் சட்டரீதியான வாரிசுக் கடனை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க: 7.5% வரை அசத்தலான வட்டி தரக்கூடிய சிறுசேமிப்புத் திட்டங்கள்…!
ஒருவேளை இந்த கடனுக்கு ஏதேனும் இன்சூரன்ஸ் இருக்கும் பட்சத்தில் வங்கி இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கிளைம் தாக்கல் செய்து மீதமிருக்கக்கூடிய தொகையை அதன் மூலமாக பெற்றுக் கொள்ளும். ஒருவேளை துணைக் கடன் பெற்றவர், உத்தரவாதம் அளித்தவர் அல்லது இன்சூரன்ஸ் போன்ற எதுவுமே இல்லாத பட்சத்தில் அந்த சொத்தை ஏலம் மூலமாக விற்பனை செய்வதற்கான உரிமை வங்கிக்கு உள்ளது.
கடன் வாங்கியவர் இறந்தால் கார் லோன்களுக்கு என்ன ஆகும்?
ஒருவேளை கடன் வாங்கியவர் கார் லோனை திருப்பி செலுத்தாமல் இறந்து விட்டால் வங்கி முதலில் கடன் பெற்றவரின் குடும்பத்தை அணுகுவார்கள். சட்டரீதியான வாரிசுகள் கடனை திருப்பி செலுத்துவதற்கு மறுத்தால் வாகனத்தை ஏலத்தில் விட்டு மீதம் இருக்கக்கூடிய தொகையை பெற்றுக் கொள்வார்கள்.
இதையும் படிக்க: ஒரே ஒரு ரீசார்ஜ்… 395 நாட்களுக்கு கவலையே இருக்காது… BSNL-ன் சூப்பர் பிளான்..!
கிரெடிட் கார்டுகள் போன்ற அன்-செக்யூர்டு லோன்கள், பர்சனல் லோன் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களில் இந்த சூழ்நிலை வித்தியாசமானதாக இருக்கும். இந்த வகையான லோன்கள் எந்தவிதமான அடைமானங்களோடும் தொடர்பில்லாதது என்பதால் சட்டரீதியான வாரிசுகள் அல்லது குடும்பத்தாரை கடன் பெற்றவர் இறந்த பிறகு கடனை செலுத்துமாறு வங்கிகளால் வற்புறுத்த முடியாது.
December 29, 2024 11:49 AM IST