உங்களுடைய கடன் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பொருளாதார ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். பர்சனல் லோனாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கிரெடிட் கார்டாக இருந்தாலும் சரி நீங்கள் நிச்சயமாக கிரெடிட் ஸ்கோர் மற்றும் சிபில் ஸ்கோர் போன்ற வார்த்தைகளை கேட்டிருக்க வேண்டும். எந்த ஒரு கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பும் இந்த இரண்டு ஸ்கோர்களுக்கு இடையிலான வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?
ஒரு கிரெடிட் ஸ்கோர் என்பது உங்களுடைய கிரெடிட் வரலாற்றின் ஒரு பிரதிபலிப்பு என்று கூறலாம். இது உங்களை நம்பி கடன் கொடுக்கலாமா வேண்டாமா என்பதை நிர்ணயம் செய்யக்கூடிய ஒரு மதிப்பெண். உங்களுடைய கிரிடிட் ஸ்கோர் பொதுவாக நீங்கள் கடந்த காலத்தில் வாங்கிய கடன்கள், நீங்கள் அந்த கடனை திருப்பி செலுத்திய விதம் மற்றும் நிலுவையில் இருக்கும் கடன் தொகை போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
இந்த கிரெடிட் ஸ்கோர்களை வழங்குவதற்கு ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா 4 மேஜர் கிரெடிட் பியூரியாக்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. அவை, TransUnion CIBIL, Experian, Equifax மற்றும் CRIF High Mark. இந்த ஸ்கோர்களை வழங்குவதற்கு ஒவ்வொரு பியூரியாவும் அவர்களுக்கே உரிய முறைகளை பின்பற்றுவார்கள். அவை ஒன்றோடு ஒன்று மாறுபடலாம்.
CIBIL ஸ்கோர் என்றால் என்ன?
சிபில் ஸ்கோர் என்ற 3 இலக்க எண் இந்தியாவிலுள்ள 4 கிரெடிட் பியூரியாக்களில் ஒன்றான TransUnion CIBIL மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ஸ்கோர் பொதுவாக 300 முதல் 900 வரை இருக்கும். இந்த ஸ்கோர் அதிகமாக இருக்கும்போது, உங்களை நம்பி கடன் கொடுக்கலாம் என்ற உறுதியை ஏற்படுத்துகிறது. சிபில் ஸ்கோர் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது. இது CIR என்று அழைக்கப்படும் கிரெடிட் இன்ஃபர்மேஷன் ரிப்போர்டின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அதாவது உங்களுடைய முந்தைய கடன்களின் ஒரு சுருக்கமே இது.
ஆரோக்கியமான ஸ்கோரை பராமரிப்பது
சிபில் ஸ்கோர் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று மாறுபடும். எனினும் இவை இரண்டுமே உங்களுடைய கடன்பெறும் நம்பகத் தன்மையை பிரதிபலிக்கிறது. எனவே, ஆரோக்கியமான சிபில் மற்றும் கிரெடிட் ஸ்கோர் பராமரிப்பது எதிர்காலத்தில் கடன்கள் வாங்கும்போது உங்களுக்கு சிறந்த டீல்கள் பெற்றுத் தருவதை உறுதி செய்யும்.
இதையும் படிக்க:
மளிகை உள்ளிட்ட உங்களின் தினசரி தேவைகளுக்கு ஏற்ற சிறந்த 7 கிரெடிட் கார்டுகள்…!
இந்தியாவில் சிபில் ஸ்கோர் என்பது மிகவும் பொதுவான ஒரு கிரெடிட் ஸ்கோர். இது 700ஐ விட அதிகமாக இருக்கும்போது, உங்களுக்கு குறைவான வட்டியில் பர்சனல் லோன்கள் கிடைக்கும். அது மட்டுமின்றி, உங்களுடைய கடன் விண்ணப்பங்கள் விரைவாக அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் ஒரே ஒரு முறை கடன் தொகையை செலுத்தத் தவறியிருந்தால் கூட அது உங்களுடைய ஸ்கோரை பாதிக்கலாம். எனவே எப்பொழுதும் உங்களுடைய பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது அவசியம்.
இதையும் படிக்க:
கிரெடிட் ஸ்கோர் கம்மியா இருந்தாலும் பரவாயில்லை… இந்த ஐடியா ஃபாலோ பண்ணி பர்சனல் லோன் வாங்கலாம்…!
எனவே, எந்த ஒரு கடனை வாங்குவதற்கு முன்பும் அது உங்களுக்கு ஏன் தேவை? அதனை வாங்கினால் உங்களால் திருப்பி செலுத்த முடியுமா? என்பதை நீங்கள் யோசித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக நீங்கள் உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை சிறந்த முறையில் பராமரித்து, வீண் பொருளாதார பாரங்களை தவிர்க்கலாம். கிரெடிட் ஸ்கோரை ஒரே இரவில் உங்களால் அதிகரிக்க முடியாது. தொடர்ச்சியாக சரியான முறையில் நீங்கள் கடன்களை திருப்பி செலுத்தினால் மட்டுமே கிரெடிட் ஸ்கோர் படிப்படியாக உயரும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
.