இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்த நிலையில் தற்போது ஏ.ஆர். ரகுமான் இசை குழுவில் இடம் பெற்றுள்ள பெண் இசைக்கலைஞரான மோகனிடே என்பவர் தனது கணவரை பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஏ.ஆர். ரகுமான் – சாய்ரா பானு இணை பிரிய போவதாக அறிவித்த அடுத்த சில மணி நேரங்களில் ஏ.ஆர். ரகுமான் இசை குழுவில் உள்ள ஒருவர் விவாகரத்து அறிவிப்பது என்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
29 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த ஏ.ஆர். ரகுமான் மற்றும் சாய்ரா பானு ஜோடி பரஸ்பரம் பிரிவதாக நேற்று அறிவித்தனர்.
Also Read:
ஆடம்பர பங்களா முதல் கார்கள் வரை… இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் நிகர மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இது தொடர்பாக சாய்ரா பானு தரப்பிலிருந்து வெளிவந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த இந்த ஜோடி ரோல் மாடலாக பலரால் கருதப்பட்டு வந்தது. இதனால் சாய்ரா பானு தரப்பிலிருந்து வந்த அறிவிப்பு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதலில் இது உண்மைதானா என ரகுமானின் ரசிகர்கள் பலர் சந்தேகம் தெரிவித்திருந்தனர். அடுத்த சில நிமிடங்களில் சாய்ரா பானு தனது வழக்கறிஞர் மூலமாக விவாகரத்து தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது உறுதிப்படுத்தப்பட்டது. தங்களுக்கு இடையே நிரப்பு முடியாத அளவுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளதாகவும், இதனை யாராலும் தீர்க்க முடியாது என்றும் சாய்ரா பானு தனது விவாகரத்து தொடர்பான அறிவிப்பில் கூறியுள்ளார்.
மேலும் தங்களது தனி உரிமைக்கு அனைவரும் மதிப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். சாய்ரா பானுவை தொடர்ந்து ஏ.ஆர். ரகுமானும் தனது சமூக வலைதள பக்கங்களில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். தங்களது திருமண வாழ்வு 30 வயதை எட்டும் என்று நம்பியதாகவும் ஆனால் எல்லாமே கண்ணுக்குத் தெரியாத முடிவாக தெரிவதாக ரகுமான் கூறியுள்ளார்.
இந்த பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் ரகுமான் இசை குழுவில் இடம் பெற்றுள்ள பெண் இசைக்கலைஞர் மோகினி டே என்பவர் அவரது கணவர் மார்க் ஹாட்சை பிரிவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். கனத்த இதயத்துடன் தனது கணவரை பிரிந்து விட்டதாக மோகினி தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.
இருப்பினும் இசை குழுக்கள் தொடர்பான பணிகளில் தொடர்ந்து மார்க் ஹாட்ச்சுடன் இணைந்து செயல்படுவேன் என்றும் தனது தனி உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மோகனி டே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
29 வயதாகும் மோகினி ரகுமானுடன் இணைந்து 40 இசை நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. ரகுமானை அவரது மனைவி பிரிவதாக அறிவித்த சில மணி நேரங்களில், அவருடைய இசைக் குழுவில் இருக்கும் ஒருவர் தனது கணவரை பிரிவதாக அறிவித்திருப்பது சமூக வலைதளங்களில் பல யூகங்களை நெட்டிசன்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
.