Last Updated:

கனடா அதிபரின் கருத்து மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்றும், புதிய கட்சியை அவர் தொடங்கலாம் என்றும் யூகம் செய்யப்படுகிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது  பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவருக்கு முக்கிய கட்சியான புதிய ஜனநாயக கட்சி அளித்து வந்த ஆதரவை விலக்கிய நிலையில், வர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

கனடா பிரதமர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்தார். 10 ஆண்டுகளாக தொடர்ந்து அவர் கனடா பிரதமராக இருந்து வந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமாவை அறிவித்திருக்கிறார்.

53 வயதாகும் ஜஸ்டின் ட்ருடோ கனடாவில் நீண்ட காலமாக பிரதமர் பொறுப்பில் இருந்தவர் என்ற பெயரை பெற்றுள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது-

நான் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும், பிரதமர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். எனக்கு அடுத்ததாக தலைமை வகிக்கும் நபரை கட்சி தேர்வு செய்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். வரும் தேர்தலில் சிறந்த ஒருவரை பிரதமராக கனடா தேர்வு செய்யும். உட்கட்சி மோதலில் ஈடுபட்டால் அந்தத் தேர்தலில் நான் சிறந்த தேர்வாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

கனட அதிபரின் இந்த கருத்து மீண்டும் அவர் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்றும், புதிய கட்சியை அவர் தொடங்கலாம் என்றும் யூகம் செய்யப்படுகிறது.

இதையும் படிங்க – அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்… டிரம்ப் ஹோட்டல் வெளியே வெடித்த டெஸ்லா வாகனம்

இதற்கிடையே கன்சர்வேட்டிவ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை புதிய ஜனநாயக கட்சி விலக்கியதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன் காரணமாகவும் ஜஸ்டின் ட்ருடோ பதவி விலகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 10 கால ஆட்சி காலத்தில் ஏராளமான பரபரப்பு சம்பவங்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் காரணமாக இருந்தார்.

தமிழ் செய்திகள்/உலகம்/

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவிப்பு.. புதிய கட்சி தொடங்கலாம் என தகவல்



Source link