Last Updated:
அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம் இயக்கத்தில் கலகலப்பான ரோமான்ஸ் காமெடி படமாக உருவாகிறது ‘யோலோ’.
அமீர் மற்றும் சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம் இயக்கத்தில் கலகலப்பான ரோமான்ஸ் காமெடி படமாக உருவாகிறது ‘யோலோ’.
இந்தப் படத்தில் புதுமுக நடிகர்கள் தேவ், தேவிகா நாயகன் நாயகியாக நடிக்கின்றனர். முக்கிய பாத்திரங்களில் படவா கோபி, பிரவீன், சுவாதி, ஆகாஷ், நிதி ப்ரதீப், திவாகர், யுவராஜ், சுபாஷினி கண்ணன், விஜே நிக்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஒருமுறை மட்டும் தான் இந்த வாழ்க்கை, அதனை உரியமுறையில் சரியாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்தப் படம் காதல், காமெடியுடன் ஃபேன்டஸி கலந்து உருவாகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
January 12, 2025 11:17 AM IST