கலிபோர்னியா காட்டுத்தீயால், சுமார் 50 பில்லியன் டொலர் வரையில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர்.
இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், இந்த காட்டுத்தீக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.
1 லட்சத்து 30 ஆயிரம் பேர் ஏற்கனவே அந்த பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹாலிவுட் நட்சத்திரங்கள் அதிகமாக வசித்து வரும் பகுதிகளிலும் தீ பரவி வருகின்ற சூழல் காரணமாக, பிரபலங்கள் பலரும் தங்களின் சொந்த வீடுகளை இழந்துள்ளனர்.