Last Updated:
கவுதம் மேனன் இயக்கத்தில் மலையாளத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. மம்மூட்டி முன்னணி கேரக்டரில் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கவுள்ள அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனராக கவுதம் மேனன் இருந்து வருகிறார். இவரது இயக்கத்தில் கமல்ஹாசன், அஜித், சிம்பு, தனுஷ், விக்ரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படங்களை இயக்குவதுடன் சமீப காலமாக திரைப்படங்களில் அவர் நடித்தும் வருகிறார்.
விஜய்யுடன் அவர் லியோ படத்தில் நடித்திருந்தார். அந்த கேரக்டர் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மொழியை தவிர்த்து மலையாளத்திலும் சில கேரக்டர்களின் கவுதம் மேனன் நடித்து வருகிறார்.
இவரது இயக்கத்தில் மலையாளத்தில் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. மம்மூட்டி முன்னணி கேரக்டரில் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையொட்டி படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கவுதம் மேனன் நேர்காணல் அளித்து வருகிறார். அப்போது அவரிடம் அடுத்த படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ள பதிலில் கூறியதாவது-
இயக்குனர் வெற்றிமாறனின் கதையை படமாக்க திட்டமிட்டுள்ளேன். ஹீரோவாக ரவி மோகன் நடிப்பார். இந்த படத்துக்கான பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது என்று கூறியுள்ளார். இதற்கிடையே ரவி மோகன் நடிப்பில் வெளிவந்துள்ள காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது.
January 19, 2025 10:06 PM IST