Last Updated:

Sangeetha Sai | ’கனா காணும் காலங்கள்’, ‘அய்யனார் துணை’ சீரியல்களின் மூலம் கவனம் பெற்ற அரவிந்த் சேஜுவை காதலிப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார் சங்கீதா சாய்.

News18

விஜய் டிவியின் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் நடித்து கவனம் பெற்ற சங்கீதா சாய் தனது காதலர் யார் என்பதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சன்டிவியின் ‘வணக்கம் தமிழா’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் விஜே சங்கீதா. தொடர்ந்து சன்டிவியில் ஒளிபரப்பான ‘அழகு’ சீரியல் மூலம் பிரபலமடைந்தார்.

பின்னர் ‘கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸில் நடித்தார். தனிப்பட்ட காரணங்களால் அந்த தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து விஜய் டிவியில் சமீபத்தில் நிறைவடைந்த ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் வசு கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டைப் பெற்றார்.

இதையும் வாசிக்க: Keerthy Suresh | “7 ஆண்டுகள் மூத்தவர்…ஆர்குட்டில் பேச தொடங்கினோம்” – கீர்த்தி சுரேஷ் காதல் கதை! 

இந்நிலையில், ’கனா காணும் காலங்கள்’, ‘அய்யனார் துணை’ சீரியல்களின் மூலம் கவனம் பெற்ற அரவிந்த் சேஜுவை காதலிப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார் சங்கீதா சாய். ‘கனா காணும் காலங்கள்’ தொடரின்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம். அவர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.



Source link