காந்தாரா படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் காந்தாரா படத்தின் 2 ஆம் பாகத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கிய காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. மொத்தமே அதிகபட்சமாக ரூ. 16 கோடி செலவில் இந்த படத்தை தயாரித்திருந்தனர். படத்தின் திரைக்கதை காட்சியமைப்புகள், சுவாரசியமான காட்சிகள், பின்னணி இசை உள்ளிட்டவற்றால் காந்தாரா ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

விளம்பரம்

தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் இந்தியிலும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அதன்பின்னர் இந்த படத்தின் அடுத்த பாகம் எப்போது உருவாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து காந்தாரா 2 ஆம் பாகத்திற்கான அறிவிப்பு வெளிவந்து படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கு காந்தாரா 2 என பெயர் வைக்கப்படாமல் காந்தாரா சாப்டர் 1 என பெயர் வைத்துள்ளார்கள்.

இதையும் படிங்க – சூர்யா 44 படத்தின் கதை இதுதான்.. சஸ்பென்ஸை போட்டு உடைத்த நடிகை பூஜா ஹெக்டே..!

விளம்பரம்

இந்த படத்தில் காந்தாரா படத்தில் இடம்பெற்ற கதைக்கு முந்தைய காட்சிகள் Prequel இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காந்தாரா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தசராவை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

காந்தாரா படங்களை தவிர்த்து கேஜிஎஃப் 3, சலார் 2 உள்ளிட்ட அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களை ஹோம்பலே நிறுவனம் தயாரித்து வருகிறது.

.





Source link