கான்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை தொடர்ந்து பெய்துவருவதால் இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2 ஆவது டெஸ்டின் 3 ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் இந்த போட்டி டிராவில் முடிவுதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

வங்கதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி கான்பூரில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோது போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

விளம்பரம்

சனிக்கிழமையான நேற்றும் மழை பெய்ததால், இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. பிற்பகல் வரை மழை நீடித்ததால் இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இன்றும் மழை நீடித்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படுதவாக நடுவர்கள் அறிவித்துள்ளனர். இன்னும் முதல் இன்னிங்ஸே முடியாத நிலையில் 2 நாட்கள் ஆட்டம் மட்டுமே மீதம் இருப்பதால் இந்த போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க – தீயணைப்பு வீரர்களுக்கான சர்வதேசப் போட்டி… 4 தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கிய நெல்லைக்காரர்

விளம்பரம்

இதற்கிடையே வங்கதேசத்திற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வரும் 6 ஆம்தேதி தொடங்குகிறது. இதையொட்டி சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஜித்தேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விளம்பரம்

.



Source link