நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (எல்ஐசி) பெயர் கிராமம் முதல் நகரத்தில் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் நன்கு தெரிந்ததாக உள்ளது. நம் நாட்டில் ஏழை, நடுத்தர மக்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் எல்ஐசி பாலிசிகளை வைத்திருக்கிறார்கள்.
இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளரான எல்ஐசி, அதன் பாலிசிதாரர்களின் நிதியில் கணிசமான பகுதியை பங்குகளில் முதலீடு செய்கிறது. இப்படி எல்ஐசி பல்வேறு நிறுவனங்களில் முதலீடுகள் செய்வதன் மூலம் கணிசமான லாபத்தை ஈட்ட அனுமதிக்கிறது.
செப்டம்பர் காலாண்டில், எல்ஐசி ஏற்கனவே கைவசம் இருந்த 285 பங்குகளில் 75 பங்குகளின் வரம்பை அதிகரித்துள்ளதோடு அதன் போர்ட்ஃபோலியோவில் 7 புதிய பங்குகளையும் சேர்த்துள்ளது. எல்ஐசி மொத்தமாக ரூ.56,000 கோடி வரை முதலீடு செய்துள்ளது. அதில் பாதியளவு பெரிய நிறுவனங்களின் பங்குகளாகும். இந்த காலாண்டின் மொத்த விற்பனை ரூ.38,000 கோடி; நிகர கொள்முதல் ரூ.18,000 கோடி.
இந்த காலாண்டில், எல்ஐசி தனது பங்குகளை 84ஆக குறைத்து ஏழு நிறுவனங்களில் இருந்து முழுமையாக வெளியேறியுள்ளது. இருப்பினும், மீதமுள்ள 111 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பிரைம் டேட்டாபேஸ் தரவுகளின்படி, எல்ஐசியின் 285 பங்குகள் கொண்ட போர்ட்ஃபோலியோவின் மொத்த மதிப்பு ரூ.16.76 லட்சம் கோடி ஆகும். முந்தைய காலாண்டில் இது ரூ.15.72 லட்சம் கோடியாக இருந்தது.
எல்ஐசி பல புளூசிப் பங்குகளில் முதலீடு செய்துள்ளது. இதில் லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) பங்குகள் ரூ.3,439 கோடிக்கும், அதைத் தொடர்ந்து மாருதி சுஸுகி இந்தியா ரூ.2,857 கோடிக்கும் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ரூ.2,659 கோடிக்கும் உள்ளது. இண்டஸ்இன்ட் வங்கி (ரூ.2,396 கோடி), மஹிந்திரா & மஹிந்திரா (ரூ.1,839 கோடி), ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (ரூ.1,824 கோடி), ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ரூ.1,686 கோடி), பஜாஜ் ஃபின்சர்வ் (ரூ.1,519 கோடி), கோடக் மஹிந்திரா வங்கி (ரூ.1,363 கோடி) மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ரூ.1,351 கோடி) ஆகியவை மற்ற குறிப்பிடத்தக்க முதலீடுகளாகும்..
இதையும் படிக்க:
ரூ.10,000 எமர்ஜென்சி லோனை உடனடியாக பெறுவது எப்படி…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…
மேலும் பல பெரிய நிறுவனங்களில் எல்ஐசி தனது பங்குகளை குறைத்துள்ளது. குறிப்பாக ரூ.2,230 கோடி மதிப்புள்ள என்டிபிசி பங்குகளையும், ஹெடிஃப்சி அசெட் மேனேஜ்மென்ட்டில் ரூ.2,129 கோடி மதிப்புள்ள பங்குகளையும் விற்றுள்ளது. அதுமட்டுமின்றி குறிப்பிடப்படாத நிறுவனங்களில் ரூ.2,105 கோடி மதிப்புள்ள பங்குகளை எல்ஐசி விலக்கிக் கொண்டுள்ளது.
மற்ற முக்கிய முதலீடுகளாக ஹீரோ மோட்டோகார்ப் (ரூ.1,987 கோடி), டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (ரூ.1,732 கோடி), கெயில் இந்தியா (ரூ.1,726 கோடி), வோல்டாஸ் (ரூ.1,718 கோடி), டாடா பவர் (ரூ.1,706 கோடி), ஹெச்பிசிஎல் (ரூ.1,562 கோடி) ஆகியவை அடங்கும்.
இதையும் படிக்க:
இந்த வருடம் முடியப் போகுது… உங்களுடைய பொருளாதார முடிவை எடுப்பதற்கான கடைசி சான்ஸ மிஸ் பண்ணிடாதீங்க!!!
எல்ஐசி சமீபத்தில் ஏழு புதிய பங்குகளைச் சேர்த்து அதன் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது. சைன்ட் லிமிடெட், ஷியாம் மெட்டல்ஸ் அன்ட் எனர்ஜி லிமிடெட், சனோஃபி கன்சூமர் ஹெல்த்கேர் இந்தியா, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவை எல்ஐசியின் பங்குகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்களாகும்.
.