ஐயப்பன் கோவில் மண்டல பூஜை சீசன், கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.

விளம்பரம்

இதையும் படிங்க: சாபத்தில் உருவானதா தேரிக்காடு… கள்ளர் வெட்டுத் திருவிழாவின் வியக்க வைக்கும் பின்னணி…

தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை ரூ.1200க்கும், பிச்சி ரூ.600க்கும், சம்பங்கி ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.800க்கும், மல்லிகைப்பூ கிலோ ரூ.1500க்கும், அரளிப்பூ கிலோ ரூ.470க்கும், வாடாமல்லி கிலோ ரூ.170க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.60க்கும், சம்பங்கி கிலோ ரூ.180க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.800க்கும், ரோஸ் கிலோ ரூ.280க்கும் விற்பனையாகிறது.

விளம்பரம்

மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.350க்கும், துளசி கிலோ ரூ.50க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.10க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.1600க்கும், செவ்வந்தி கிலோ ரூ.370க்கும். விற்கப்படுகிறது.

இதுகுறித்து தோவாளை மலர் சந்தையை சேர்ந்த வியாபாரிகள் கூறும்பொழுது தற்போது ஐயப்பன் கோவில் மண்டல பூஜை சீசன் மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகம் இருப்பதினால் பூக்கள் விலை வழக்கத்தை விட உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: இங்க வந்தால் சொர்க்கத்தையே பார்க்கலாம்… கன்னியாகுமரியில் இந்த ஸ்பாட்டை மிஸ் பண்ணாதீங்க…

விளம்பரம்

மேலும், குமரி மாவட்டத்திற்கு வெளி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பூக்களின் அளவும் குறைவாக இருக்கிறது. இதனால் தேவைக்கேற்ப பூக்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதன் காரணமாக பூக்களின் விலை உயர்ந்து வருகிறது என்றனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க

.



Source link