Last Updated:

மைதானத்தில் ஓடிச் சென்ற அஜித், கைகளால் ஹார்ட்டின் வரைந்து அணியினருக்கு அன்பை வெளிப்படுத்தினார்.

News18

துபாயில் நடைபெறும் கார் ரேஸில் தனது ரேசிங் அணி, 3-ஆவது இடத்தைப் பிடித்ததை நடிகர் அஜித் கொண்டாடினார்.

துபாயில் நடைபெறும் போர்ஷே ஜிடி 911 கார் ரேசிங் கோப்பைக்கான போட்டிகளின் பல்வேறு பிரிவுகளில் அஜித்தின் அணி பங்கேற்றுள்ளது. இதில் தனது அணி பிரிவில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய அஜித், தனி நபர் பிரிவில் பங்கேற்க உள்ளார். இதனிடையே அஜித்தின் அணி, 992 பிரிவில் மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியது. இதனை நடிகர் அஜித் தனது அணியினரைக் கட்டிப் பிடித்து கொண்டாடினார்.

மேலும் மைதானத்தில் ஓடிச் சென்ற அஜித், கைகளால் ஹார்ட்டின் வரைந்து அணியினருக்கு அன்பை வெளிப்படுத்தினார்.

வெற்றியுடன் திரும்பிய அஜித்தை அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் உற்சாகத்துடன் வரவேற்றனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் லைக்ஸை குவித்து வருகிறது.

இதனிடையே, துபாயில் அஜித்தை நடிகர் மாதவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். போட்டிகளுக்கிடையே ஓய்வெடுத்த அஜித்துடன் மனைவி ஷாலினியும், மகளும் அளவளாவி மகிழ்ந்தனர்.





Source link