பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக  விலகி உள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றனர். ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

விளம்பரம்

இதைத்தொடர்ந்து வரும் ஆறாம் தேதி அடிலெய்டில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் குறித்து அண்மையியல் ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு வெளியிட்டது. அதில், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் இடம் பெற்றிருந்தார்.

இதையும் படிங்க:
ரவி சாஸ்திரியின் போன் கால்… விதியை தளர்த்திய பிசிசிஐ – விராட் கோலியின் ‘ஃப்ளையிங் கிஸ்’ உருவான கதை!

ஆனால் தற்போது காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார். இவருக்கு பதிலாக சீன் அபோட் மற்றும் பிரெண்டன் டோகெட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இந்திய அணிக்கும் சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..

விளம்பரம்

.

  • First Published :



Source link