Last Updated:

பொதுமக்களை குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

News18

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போர் தொடர்ந்து வரும் நிலையில் காஸாவில் சுமார் 45,500 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏராளமான மக்கள், தெற்கு காசாவில் உள்ள பாதுகாப்பான பகுதி என அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இந்நிலையில், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தியது. அதில் மக்கள் தங்கியிருந்த தற்காலிக கூடாரங்களில் இருந்த குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 40 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் பொதுமக்களை குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என இஸ்ரேல் ராணுவ தரப்பு தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அதிகமுள்ள பகுதிகளிலிருந்து எதிர்படைகள், தாக்குதல் நடத்துவதே மக்கள் உயிரிழப்புக்கு காரணம் எனவும் இஸ்ரேல் ராணுவ தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.



Source link