நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர்.
காஸா நகரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடை பயணமோ அல்லது கார் பயணமோ, தங்கள் வீடுகளை நோக்கிய பயணத்தை பாலத்தீனர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
“இங்கு எந்த வசதிகளும் இல்லை, பொதுச் சேவைகள் இல்லை, மின்சாரம் இல்லை, தண்ணீர் இல்லை, உள்கட்டமைப்புகள் இல்லை” என்று காஸா பத்திரிகையாளர் காடா எல்-குர்த் கூறியுள்ளார். .
ஒக்டோபர் 2023 முதல் காஸாவில் 70% வீடுகள் சேதப்படுத்தப்பட்டோ அல்லது அழிக்கப்பட்டோ இருப்பதாக ஐநா மதிப்பிட்டுள்ளது. வடக்குப் பகுதியில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
The post காஸாவில் 70% வீடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது appeared first on Daily Ceylon.