Last Updated:
டெஸ்டில் இந்தியா வெற்றி பெற முடியாவிட்டாலும் தோல்வியை தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்பட்டன. 340 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட்கோலி, ரோஹித் சர்மா கணிசமான பங்கு அளித்திருந்தால் குறைந்த பட்சம் இந்த போட்டியை டிரா செய்திருக்கலாம்.
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறி விட்டதாக தோல்வி குறித்து கேப்டன் ரோகித் சர்மா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ள நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஃபைனலில் பங்கேற்பதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு குறைந்துள்ளது.
இந்த போட்டியில் முதல் அணியாக தென்னாப்பிரிக்கா நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதை தொடர்ந்து தகுதி பெற்றது. 2 ஆவது எந்த அணி தகுதி பெறும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் அந்த இடத்திற்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கடும் போட்டியில் இருந்தன.
இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற்ற 4 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி தொடரில் முன்னிலை பெற்றது. மெல்போர்ன் மேட்ச்சுக்கு பின்னர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான தரவரிசை பட்டியல் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதன்படி தென்னாப்பிரிக்க அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலிய அணி 61.46 வெற்றி சதவீதத்துடன் 2 ஆம் இடத்திலும் உள்ளன.
இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெற முடியாவிட்டாலும் தோல்வியை தவிர்ப்பதற்கு அதிக வாய்ப்புகள் காணப்பட்டன. 340 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் சீனியர் பேட்ஸ்மேன்களான விராட்கோலி, ரோஹித் சர்மா கணிசமான பங்கு அளித்திருந்தால் குறைந்த பட்சம் இந்த போட்டியை டிரா செய்திருக்கலாம்.
அதிக வாய்ப்புகள் இருந்தும் அதனை இந்திய அணி தவற விட்டதால் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் தோல்வி குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது-
தோல்வி அடைந்திருப்பது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. வெற்றிக்காக இந்த போட்டியில் இன்னும் கடுமையாக போராடியிருக்க வேண்டும். கிடைத்த வாய்ப்புகளை தவற விட்டதால் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்திருக்கிறோம். ஒரு அணியாக இன்னும் நாங்கள் சிறப்பாக விளையாட தவறி விட்டோம் என்று தெரிவித்தார்.
December 30, 2024 9:38 PM IST