Last Updated:
UPI அதிக அளவில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், டிஜிட்டல் பேமெண்ட்களை செய்வதற்கு பலர் தங்களுடைய கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர்.
டிசம்பர் 2024ஆம் ஆண்டில் யுனிஃபைடு பேமெண்ட் இன்டர்பேஸ் (UPI) மூலமாக செய்யப்பட்ட டிரான்ஸ்ஷாக்ஷன் 16.73 பில்லியனை எட்டியுள்ளது. இது கடந்த நவம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 8% அதிகமாகும். UPI அதிக அளவில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், டிஜிட்டல் பேமெண்ட்களை செய்வதற்கு பலர் தங்களுடைய கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். ஆனால், தற்போது கிரெடிட் கார்டை கூட UPI உடன் இணைத்துக் கொள்வதற்கான ஆப்ஷன் கிடைக்கிறது. அதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கிரெடிட் கார்டுடன் UPI இணைப்பது எப்படி?
- நீங்கள் இப்போதுதான் முதல்முறையாக UPI பயன்படுத்த போகிறீர்கள் என்றால் பாரத் இன்டர்ஃபேஸ் பார் மணி (BHIM) என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
- UPI எனேபிள் செய்யப்பட்ட கிரெடிட் கார்டுடன் உங்களுடைய கிரெடிட் கார்டை இணைப்பதற்கு UPI அப்ளிகேஷனை திறந்து ‘ஆட் பேமென்ட் மெத்தட்’ என்ற பிரிவுக்குச் செல்லுங்கள்.
- இங்கு கிரெடிட் கார்டு ஆப்ஷனை தேர்வு செய்து உங்களுடைய கிரெடிட் கார்டு நம்பர், CVV மற்றும் கார்டில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி தேதியை குறிப்பிடவும்.
- கார்டு விவரங்களை நிரப்பிய பிறகு உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (OTP) அனுப்பி வைக்கப்படும்.
- உங்களுடைய கிரெடிட் கார்டு அக்கவுண்ட்டை UPI உடன் இணைத்த பிறகு ஒரு UPI IDயை நீங்கள் உருவாக்க வேண்டும்.
- உங்கள் பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ID பயன்படுத்தி நீங்கள் UPI மூலமாக பணத்தை பிறருக்கு அனுப்பலாம் மற்றும் பெறலாம்.
- உங்களுடைய UPI IDயை பற்றி தெரிந்து கொள்வதற்கு அப்ளிகேஷனில் உள்ள ப்ரொஃபைல் பிரிவுக்கு சென்று UPI ID என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
UPI எனேபிள் செய்யப்பட்ட அப்ளிகேஷனை பயன்படுத்தி கிரெடிட் கார்டு பேமெண்ட்களை செய்வது எப்படி?
- வழக்கமாக நீங்கள் ஒரு QR கோடை ஸ்கேன் செய்யலாம் அல்லது ‘பே போன் நம்பர்’ அல்லது ‘பே காண்டாக்ட்’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து, உங்களுடைய UPI IDயை என்டர் செய்யுங்கள்.
- செல்ஃப் டிரான்ஸ்ஃபர் என்பதை தேர்வு செய்வதன் மூலமாக உங்களுடைய ஒரு அக்கவுண்டில் இருந்து மற்றொரு அக்கவுண்டிற்கு நீங்கள் பணத்தை அனுப்பிக் கொள்ளலாம்.
- அப்ளிகேஷன் QR கோடு, போன் நம்பர் அல்லது காண்டாக்ட் நம்பரை வெரிஃபை செய்த பிறகு நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்ய நினைக்கும் தொகையை என்டர் செய்யவும்.
- தொகையை என்டர் செய்த பிறகு கிரெடிட் கார்டை தேர்வு செய்யவும்.
- பின் நம்பர் என்டர் செய்துவிட்டு பேமெண்டை நிறைவு செய்யுங்கள்.
இதையும் படிக்க: நவம்பர் 2024ல் மேலும் 8 டன் தங்கத்தை வாங்கிய இந்திய ரிசர்வ் வங்கி…!
எந்தெந்த வங்கிகளால் UPI உடன் ரூபே கிரெடிட் கார்டுகளை இணைக்க முடியும்?
நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 22 வங்கிகளை ரூபே கிரெடிட் கார்டுகளுடன் UPI இணைப்பதற்கு அனுமதிக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் வங்கி, இந்தியன் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பிஓபி நிதி சேவைகள் லிமிடெட், யெஸ் வங்கி, எஸ்பிஐ கார்டுகள், ஐசிஐசிஐ வங்கி, ஏயூ எஸ்எஃப்பி, ஐடிஎஃப்சி வங்கி, IndusInd வங்கி, சிஎஸ்பி, எஸ்பிஎம் வங்கி, பெடரல் வங்கி, சரஸ்வத் கூட்டுறவு வங்கி லிமிடெட், ஆர்பிஎல், உட்கர்ஷ் எஸ்எஃப்பி, சிட்டி யூனியன் வங்கி மற்றும் ஈஎஸ்ஏஎஃப் சிறு நிதி வங்கி ஆகிய வங்கிகள் அடங்கும்.
இதையும் படிக்க: உலகின் உயரமான போர்க்களம் சியாச்சினில் தடம் பதித்த ரிலையன்ஸ்… முதல் டெலிகாம் நிறுவனமாக சேவை தொடக்கம்
கிரெடிட் கார்டு பேமென்ட்-களுக்கு யுபிஐ பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:
- உடனடியாக பணத்தை டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.
- UPI பேமெண்ட்களுக்கு எந்த ஒரு கூடுதல் கட்டணங்களும் கிடையாது.
- கிரெடிட் கார்டு விவரங்களை ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷனுக்கும் என்டர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
- கிரெடிட் கார்டு மூலமாக காண்டாக்ட் லெஸ் பேமெண்ட் செலுத்துவதற்கு இது உதவுகிறது.
January 14, 2025 8:03 AM IST