Last Updated:

Credit Score | கிரெடிட் ஸ்கோர் என்ற 3 இலக்க எண் உங்களுடைய பொருளாதார சம்பந்தப்பட்ட நடத்தையை பறைசாற்றுகிறது.

News18

புதிய ஒரு வருடம் ஆரம்பமாகிவிட்டது. இந்த சமயத்தில் உங்களுடைய பொருளாதார ஆரோக்கியத்தை உறுதி செய்யும் கிரெடிட் ஸ்கோர் மீது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். கடன் வாங்குவது, கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற எந்தவொரு பொருளாதார சம்பந்தப்பட்ட ப்ராடக்டுகளுக்கும் கிரெடிட் ஸ்கோர் என்பது முக்கியமான ஒரு காரணியாக அமைகிறது.

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

கிரெடிட் ஸ்கோர் என்ற 3 இலக்க எண் உங்களுடைய பொருளாதார சம்பந்தப்பட்ட நடத்தையை பறைசாற்றுகிறது. நீங்கள் கடன்களை எப்படி சரியான நேரத்திற்கு திருப்பி செலுத்துவீர்கள் மற்றும் பணத்தை எப்படி பொறுப்புடன் கையாளுவீர்கள் என்பதை இந்த எண்ணின் மூலம் தெரிந்து கொள்ளலாம். கிரெடிட் ஸ்கோர் என்பது பொதுவாக 300 முதல் 900 வரை அமையும். 750க்கும் அதிகமான ஸ்கோர் நல்ல கிரெடிட் ஸ்கோராக கருதப்படுகிறது. இந்த ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு, குறைவான வட்டியில் லோன் விரைவாக அங்கீகரிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

கிரெடிட் ஸ்கோர் ஏன் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது?

கடன் வழங்குனர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் இந்த ஸ்கோரை பயன்படுத்தி உங்களுக்கு கடன் கொடுப்பதில் இருக்கக்கூடிய ரிஸ்க்கை மதிப்பீடு செய்வார்கள். அதிக கிரெடிட் ஸ்கோர் இருப்பது உங்களுடைய பொறுப்புணர்வைக் காட்டுகிறது. பணத்தை நீங்கள் சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி விடுவீர்கள் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது. மறுபுறம் குறைவான கிரெடிட் ஸ்கோர் இருப்பது உங்களுக்கு பணத்தை சரியான முறையில் கையாளத் தெரியாது என்பதை காட்டுகிறது.

ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பதன் நன்மைகள்

  • அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு குறைவான வட்டியில் கடன் வழங்குனர்கள் கடனை வழங்குவார்கள்.
  • நல்ல கிரெடிட் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டுகள் உடனடியாக அங்கீகரிக்கப்படும்.
  • நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்கள் கடன் சம்பந்தப்பட்ட விதிகளை பேரம் பேசலாம்.
  • அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் உங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கப்படும்.

இதையும் படிக்க: ரூ.6,700 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் இன்னும் திரும்ப வரவில்லை: ரிசர்வ் வங்கி

கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதற்கான வழிகள்

  • உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை கண்காணிப்பது எந்த ஒரு பொருளாதார சம்பந்தப்பட்ட முரண்பாட்டை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து, அதற்கான சரியான நடவடிக்கை எடுப்பதன் மூலமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதுகாப்பதற்கு உதவும்.
  • உங்களுடைய கடன்களை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவதன் மூலமாக உங்களுக்கு கிரெடிட் ஸ்கோரை பராமரித்து, மேம்படுத்தலாம்.
  • நீங்கள் வாங்கும் கடன் அளவுகள் மற்றும் பணம் செலவு செய்யும் பழக்கங்களை கண்காணிப்பது அவசியம்.
  • உங்களுடைய வருமானம் மற்றும் செலவுகளை புரிந்து கொள்வதன் மூலமாக சிறந்த கடன் திருப்பி செலுத்தும் திட்டத்தை அமைத்து, உங்கள் கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கலாம்.
  • எப்பொழுதும் ஒரே மாதிரியான கடன் வாங்குவதற்கு பதிலாக செக்யூர்டு மற்றும் அன்செக்யூர்டு ஆகிய இரண்டு வகையான கடன்களை வாங்குவது கிரெடிட் ஸ்கோரில் பாசிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • அடிக்கடி கடன் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதை தவிர்க்கவும். ஏனெனில், அவ்வாறு நீங்கள் செய்யும்போது அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை தற்காலிகமாக குறைக்கலாம்.

இதையும் படிக்க: SBI அக்கவுண்ட் மினி ஸ்டேட்மெண்ட் எடுக்க இத்தனை வழி இருக்கா..? இது தெரியாம போச்சே..!

கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும் முயற்சியை சமீபத்தில் ஆரம்பித்து இருப்பவர்களுக்கான குறிப்புகள்

  • முதலில் சிறிய அளவில் ஒரு கடனை வாங்கி, அதனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தி உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை நீங்கள் அதிகரிக்கலாம்.
  • நீங்கள் கடன் வாங்குவதற்கு புதியவராக இருந்தால் ஃபிக்சட் டெபாசிட்களை அடமானமாக வைத்து செக்யூர்டு கிரெடிட் கார்டுகளை வாங்கலாம்.
  • உங்களுடைய EMI மற்றும் கிரெடிட் கார்டுகள் பேமெண்ட்களை ஆட்டோமேட் செய்து, பேமெண்ட்கள் சரியான நேரத்தில் செலுத்தப்படுவதை உறுதி செய்யலாம்.

இவ்வாறு கிரெடிட் ஸ்கோரை புரிந்துகொண்டு சரியான முறையில் அதனை நீங்கள் பராமரித்தால் சிறந்த பொருளாதார புராடக்டுகள் பெறுவது மட்டுமல்லாமல் பணத்தையும் சேமிக்கலாம்.



Source link