ஒரு பர்சனல் லோன் வாங்குவதற்கு தனி நபர் குறிப்பிட்ட சில தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் வயது குறிப்பிடப்பட்டுள்ள வயதிற்குள் அமைந்திருக்க வேண்டும்; வருமானம் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச தொகையைவிட அதிகமாக இருக்க வேண்டும்; அவரிடம் நிலையான ஒரு வேலை மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச வேலை அனுபவம் இருக்க வேண்டும்; இதைத் தவிர அவரிடம் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுக்கு அல்லது அதைவிட அதிகமான கிரெடிட் ஸ்கோர் இருக்க வேண்டும்.
வங்கிகள் பொதுவாக 750 மற்றும் அதற்கும் மேற்பட்ட கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்கும் நபர்களுக்கு பர்சனல் லோன் வழங்குவார்கள். இதற்காக குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களால் பர்சனல் லோன் வாங்க முடியாது என்ற அர்த்தம் கிடையாது. ஆகவே, குறைவான கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்கள் எப்படி பர்சனல் லோன் வாங்கலாம் என்பதற்கான வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உத்தரவாதம் அளிப்பவர் அல்லது துணை விண்ணப்பதாரர்
பர்சனல் லோன் என்பது பாதுகாப்பற்ற ஒரு லோன் என்பதால் நீங்கள் பாதுகாப்புக்காக அடைமானம் அல்லது சொத்துக்களை காண்பிக்க முடியாது. வங்கி குறிப்பிட்டுள்ள கிரெடிட் ஸ்கோரை விட உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு நபரையோ அல்லது நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்கும் துணை விண்ணப்பதாரரையோ நீங்கள் இங்கு கொண்டு வரலாம்.
கடன் வருமான விகிதத்தை குறைவாக வைத்திருத்தல் (DTI)
-
கடன் வருமான விகிதம் என்பது ஒவ்வொரு மாதமும் நீங்கள் லோன் EMI-களுக்காக உங்களுடைய மாத வருமானத்தில் இருந்து செலவு செய்யும் தொகை. உதாரணமாக ரீனா என்பவரின் மாத வருமானம் 50,000 ரூபாய் எனில், அவர் ஒவ்வொரு மாதமும் 10,000 ரூபாயை EMI-களை செலுத்துவதற்காக பயன்படுத்துகிறார். இந்த சூழ்நிலையில் ரீனாவின் DTI 20%ஆக உள்ளது. பொதுவாக வங்கிகள் 35% அல்லது அதற்கும் குறைவான DTI கொண்ட நபர்களின் லோன் விண்ணப்பங்களை உடனடியாக அங்கீகரிப்பார்கள். ஆகவே, உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் நீங்கள் குறைவான DTI பெற்றிருப்பதை உறுதிப்படுத்துங்கள்.
-
உங்களுடைய வருமானம் EMI பேமென்ட்களை செலுத்துவதற்கு போதுமானதாக இருக்கும் என்பதை நிரூபியுங்கள்
-
சமீபத்தில் உங்களுடைய சம்பளம் அதிகரித்திருந்தால், அதற்கான நிரூபணத்தை நீங்கள் வங்கியில் காட்டலாம். மேலும், கூடுதல் வருமானத்திற்கான மூலங்கள் இருந்தாலும் அதற்கான விவரங்களை வங்கியில் கொடுங்கள். இவ்வாறு பர்சனல் லோன் EMIகளை உங்களால் ஈஸியாக செலுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையை வங்கிக்கு ஏற்படுத்துங்கள்.
-
தேவைப்பட்டால் லோன் தொகையை குறைத்துக் கொள்ளும்படி வங்கியிடம் கேட்கவும்
-
ஒருவேளை உங்களிடம் கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தால், உங்களுடைய தற்போதைய பர்சனல் லோன் அப்ளிகேஷன் ரிஸ்க் நிறைந்ததாக இருக்கும். எனவே, இந்த லோன் தொகையை குறைத்துவிட்டு அதன் பிறகு அதனை அங்கீகரிப்பதற்கு ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை வங்கியில் விசாரிக்கவும்.
இதையும் படிக்க:
7 கோடி பி.எஃப். சந்தாதாரர்களுக்கு குட் நியூஸ்… இந்த மாற்றத்தை கொண்டு வரப்போகிறது மத்திய அரசு?
ஃபிக்சட் டெபாசிட்டுக்கு எதிராக ஒரு கிரெடிட் கார்டை வாங்கவும்
பர்சனல் லோன்கள் அல்லது பிற லோன்களைத் தவிர கிரெடிட் கார்டு அப்ளிகேஷன்களுக்கும் ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர் தேவைப்படுகிறது. எனவே, உங்களிடம் குறைவான கிரெடிட் ஸ்கோர் இருந்து உங்களுக்கு ஒரு கிரெடிட் கார்டு வேண்டுமென்றால், நீங்கள் செக்யூர்டு கிரெடிட் கார்டுக்கு செல்லலாம். ஒரு சில வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் கணக்கை அடைமானமாக வைத்து கிரெடிட் கார்டுகளை வழங்குவார்கள்.
இதையும் படிக்க:
போலி முதலீட்டுத் திட்டங்களைக் கூறி ஆன்லைனில் பரவும் டீப் ஃபேக் வீடியோக்கள்..! பொதுமக்களை எச்சரித்த SBI…
கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதற்கான வழிகள்
-
லோன் EMIகள் மற்றும் கிரெடிட் கார்டு மாத பில்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள்.
-
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கிரெடிட் லிமிட்டில் நீங்கள் எவ்வளவு சதவீதம் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பது கடன் பயனீட்டு விகிதம் என்று அழைக்கப்படுகிறது. உங்களுடைய கடன் பயனீட்டு விகிதம் 30% அல்லது அதற்கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
-
எப்பொழுதும் ஒரே விதமான லோன்களை வாங்குவதற்கு பதிலாக, ஹோம் லோன், வாகன லோன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டுகள் போன்ற பல்வேறு வகையான லோன்களை வாங்குவதில் கவனம் செலுத்துங்கள்.
-
ஒரு சமயத்தில் ஒரு கடன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதை உறுதிப்படுத்துங்கள். அளவுக்கு அதிகமாக நீங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது, அது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை பாதிக்கலாம்.
இதையும் படிக்க:
கேஷ்பேக் vs ரிவார்டு கிரெடிட் கார்டு… இரண்டிலும் உள்ள நன்மை, தீமைகள் பற்றி தெரியுமா?
- உங்களுடைய பழைய கிரெடிட் கார்டுகளை தொடர்ந்து பராமரித்து வாருங்கள். இது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை அதிகரிக்கும். நீங்கள் அதனை பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, தொடர்ந்து கிரெடிட் கார்டு அக்கவுன்டை திறந்து வைக்கவும்.
.