தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் தனது 15 ஆண்டுகால காதலரை நேற்று (12-12-2024) கோவாவில் கரம்பிடித்தார். கீர்த்தி சுரேஷின் கணவர் ஆண்டனி தட்டில் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், துபாயில் வசித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வண்ணம் உள்ளனர்.

கோவாவில் கோலாகலமாக நடந்த திருமண நிகழ்வில் திரையுலகைச் சேர்ந்த சிலர் கலந்துகொண்டனர். திருமணத்தில் பங்கேற்ற பிரபல நடிகர் நானி, தனது சமூக வலைதள பக்கத்தில் கீர்த்தி சுரேஷுக்கு வாழ்த்து பதிவிட்டார். மேலும், நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பங்கேற்ற நடிகர் விஜயின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி மிகவும் வைரலாகி வந்தது.

விளம்பரம்

இந்த நிலையில், நடிகை திரிஷாவும் இந்த திருமணத்தில் பங்கேற்றுள்ளார், அவரின் போட்டோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கோவாவில் நடந்த திருமணத்தில் பங்கேற்க நடிகர் விஜய் மற்றும் திரிஷா இருவரும் தனி விமானத்தில் பயணித்ததாக அவர்களின் வீடியோ மற்றும் போட்டோஸ் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

விளம்பரம்

இருவரின் பெயர் கொண்ட பாசஞ்சர் லிஸ்ட், மற்றும் விமானத்தின் பெயர் தேதியுடன் கூடிய ஸ்டாம்ப், செக்கிங் முடிந்து காரில் ஏறும் திரிஷா, அதே போல் விஜய் இவர்களின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

.





Source link