தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ் “தெறி” படத்தின் இந்தி ரீமேக்கான “பேபி ஜான்” படத்தின் மூலமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாகிறார். இவருக்கு திருமணம் நடைபெற போவதாக ஏற்கனவே சில முறை தகவல்கள் வெளிவந்தன, அதனை கீர்த்தி திருப்பதியில் உறுதிசெய்தார் . அவரின் காதலன்  பெயர் ஆண்டனி தட்டில். இந்த ஜோடி 15 ஆண்டுகள் பழக்கம் உள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது. இவரும் கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், துபாயில் வசித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது.

விளம்பரம்

கீர்த்தி சுரேஷ், தன்னுடைய நீண்ட நாள் காதலனான ஆண்டனி தட்டில் (Antony Thattil) என்பவரை இன்று திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் கோவாவில் இன்று காலை 9:40 மணியளவில் நடைபெற்றது. அந்த திருமண நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

News18

கீர்த்தி சுரேஷின் திருமண நிகழ்வில் பிரபல நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் கலந்துகொண்டுள்ளனர். திருமணத்தில் எடுத்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் அதிகளவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

விளம்பரம்

.

  • First Published :



Source link