Last Updated:
2 படங்களுக்கான அனைத்து பணிகளையும் அஜித் முடித்துக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சில மாதங்களுக்கு கார் ரேசில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடாமுயற்சியை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தான் நடித்துள்ள மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி படத்தின் டப்பிங்கை நிறைவு செய்துள்ளார். அடுத்தடுத்து 2 படங்களின் டப்பிங்கை அஜித் குமார் முடித்துள்ள நிலையில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கலையொட்டி ரிலீஸ் ஆக உள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படம் முன்பு பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகுவதை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட உள்ளது. முன்னதாக அஜித் தான் ஒப்புக்கொண்ட விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களை முழுமையாக இந்த ஆண்டு இறுதிக்குள் முடித்து விடுவார் என்று தகவல்கள் வெளிவந்தன.
அதன்படியே 2 படங்களுக்கான அனைத்து பணிகளையும் அஜித் முடித்துக் கொண்டுள்ளார். இதை தொடர்ந்து அவர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சில மாதங்களுக்கு கார் ரேசில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் வெளியாக உள்ள விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசாட்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிரேக் டவுன் படத்தை தழுவி விடாமுயற்சி திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மகிழ் திருமேனி முன்னதாக மீகாமன், கலகத் தலைவன், தடம் உள்ளிட்ட விறுவிறுப்பான படங்களை இயக்கியுள்ளார். இதனால் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.
இதையும் படிங்க – இந்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத தெறி ரீமேக்… 4 நாட்கள் வசூல் இவ்வளவுதான்!!
விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்கலி திரைப்படத்திற்காக அஜித்குமார் 25 கிலோ எடை வரை குறைத்துள்ளார். அவரது ஸ்லிம்மான தோற்றம் கடந்த சில நாட்களாக இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
December 29, 2024 10:26 PM IST