Last Updated:
நகைச்சுவை நடிகர் சுவாமிநாதனின் இல்லத்திருமண விழா கும்பகோணத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நகைச்சுவை நடிகர் சுவாமிநாதனின் இல்லத்திருமண விழா கும்பகோணத்தில் எளிமையான முறையில் நடைபெற்றது. இதில் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
கும்பகோணம் அருகே தென்னூர் கிராமத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘நானே ராஜா நானே மந்திரி’, ‘சிங்கார வேலன்’, ‘ஆறு’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இதையும் வாசிக்க: நீண்ட நாள் காதலியை திருமணம் முடித்த விக்ரம் பட இயக்குனர்.. திரைத்துறையினர் வாழ்த்து..
இந்நிலையில் சுவாமிநாதன் – ஷீலா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா என்கிற சம்பூர்ணத்துக்கும், தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர்- வத்ஸலா தம்பதியின் மகன் கீர்த்திவாசன் என்கிற சுந்தர குமாருக்கு கும்பகோணத்தில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் நகைச்சுவை நடிகர்கள் காளி வெங்கட், வையாபுரி, சின்னத்திரை நடிகர்கள், தொழிலதிபர்கள், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
January 21, 2025 7:06 AM IST