ஏசர் (Acer) நிறுவனம் இந்தியாவில் ஏசர் ஐகோனியா 8.7 (iM9-12M) மற்றும் ஏசர் ஐகோனியா 10.36 (iM10-22) என இரண்டு புதிய டேப்லெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு மாடல்களுமே ஆண்ட்ராய்டு 14-ல் இயங்குவதோடு டூயல்-பேண்ட் வைஃபை மற்றும் டூயல் சிம் 4ஜி எல்டிஇ கனெக்டிவிட்டியை சப்போர்ட் செய்கின்றன.

Acer Iconia 8.7 மாடலானது மீடியாடெக் ஹீலியோஸ் பி22டி ப்ராசஸர் மற்றும் 5,100mAh பேட்டரியை கொண்டுள்ளது. அதே நேரம் Acer Iconia 10.36 மாடலானது மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் மற்றும் 7,400எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

விளம்பரம்

இந்தியாவில் ஏசர் ஐகோனியா 8.7 டேப்லெட்டின் விலை ரூ.11,990-ஆக உள்ளது. அதேசமயம் ஏசர் ஐகோனியா 10.36ன் விலை ரூ.14,990 முதல் தொடங்குகிறது. எனினும் இந்த விலைகள் லிமிட்டட் ஆஃபர் பீரியட்டின் ஒரு பகுதி என்று நிறுவனம் குறிப்பிடுகிறது. ஆனால் எவ்வளவு நாட்கள் இது நீடிக்கும் என்பதை குறிப்பிடவில்லை. கோல்ட் கலர் ஆப்ஷனில் கிடைக்கும் இந்த டேப்லெட்களை Amazon, Acer India-வின் வெப்சைட் மற்றும் பிரத்யேக ஸ்டோர்கள் மூலம் வாங்கலாம்.

எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை உதவுமா.?


எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை உதவுமா.?

ஏசர் ஐகோனியா டேப்லெட்களின் ஸ்பெசிஃபிகேஷன்கள்:

விளம்பரம்

Iconia 8.7 டேப்லேட்டானது 1,340 x 800 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 400 nits பிரைட்னஸூடன் கூடிய 8.7-இன்ச் WXGA IPS மல்டி-டச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. MediaTek Helio P22T SoC ப்ராசஸர் இதிலுள்ளது மற்றும் இது 4GB LPDDR4 RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் 64GB eMMC ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

Iconia 10.36 டேப்லெட்டானது 2,000 x 1,200 பிக்சல்கஸ் ரெசல்யூஷன் மற்றும் 480 nits பிரைட்னஸ் கொண்ட 10.36இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

விளம்பரம்

கேமராக்களை பொறுத்த வரை Iconia 8.7 டேப்லெட்டானது செல்ஃபிக்களுக்காக 5MP ஃப்ரன்ட் கேமராவுடன், 8MP ரியர் கேமராவை கொண்டுள்ளது. மறுபுறம் Iconia 10.36-ஆனது 16MP பிரைமரி ரியர் கேமரா மற்றும் 8MP கொண்ட கூடுதல் ஃப்ரன்ட்-ஃபேசிங் கேமராவைக் கொண்ட மேம்பட்ட அமைப்புடன் வருகிறது.

இதையும் படியுங்கள் : ரியல்மி நிறுவனத்தின் அடுத்த அசத்தலான அறிமுகம்… வாடிக்கையாளர்கள் குஷி

Iconia 8.7 டிவைஸில் 10 வாட்ஸ் வரை சார்ஜ் செய்வதற்கான ஆதரவுடன் கூடிய 5,100mAh பேட்டரிபேக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் வரை யூசேஜ் டைமிங்கை வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. மாறாக, பெரிய மாடலில் (Iconia 10.36) 7,400mAh பேட்டரிபேக் உள்ளது. இது 10 மணி நேரம் வரையிலான யூசேஜ் டைமிங்கை வழங்குகிறது. இரண்டு டேப்லெட்களில் உள்ள கனெக்டிவிட்டி ஆப்ஷன்களில் ப்ளூடூத் வெர்ஷன் 5.2 OTG செயல்பாடுகளுடன் டூயல்-பேண்ட் வைஃபை திறன் மற்றும் 2 சாதனங்களிலும் USB டைப்-சி போர்ட்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.

விளம்பரம்

Acer Iconia 8.7 ஆனது டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை ஒருங்கிணைக்கிறது. அதேசமயம் பெரிய மாடலானது குவாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் யூனிட்ஸ்களை ஒருங்கிணைத்து மேம்பட்ட ஒலி தரத்தை வழங்குகிறது. Acer Iconia 8.7 +வேரியன்ட்டானது சுமார் 365 கிராம் எடையுடையது. அதே நேரம் Acer Iconia 10.36 சுமார் 475 கிராம் எடையுள்ளது.

.



Source link