ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிரீமியம் மொபைல்களில் ஒன்றான OnePlus 12R தற்போது மீண்டும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த பிரீமியம் 5G மொபைலை குறைந்த விலையில் வாங்க விரும்புவோர் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகிய இரண்டு ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களை பயன்படுத்தி தள்ளுபடி விலையில் வாங்கி கொள்ளலாம்.
தள்ளுபடி தொகை அவ்வளவு பெரியதாக இல்லை என்றாலும், இந்த மொபைலை வாங்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள யூஸர்களுக்கு மேற்கண்ட ஆன்லைன் பிளாட்பார்ம்கள் சில குறைந்தபட்ச சலுகைகளை வழங்குகின்றன. விவரங்கள் இங்கே…
அமேசான் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டலில் OnePlus 12R-க்கு வழங்கப்படும் தள்ளுபடி விவரங்கள்:
OnePlus 12R மொபைலானது அமேசானில் ரூ.39,998 என்ற ஆரம்ப விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது அதன் ஒரிஜினல் ரீடெயில் விலை ஆகும். ஆனால் அமேசான் கூப்பன் வடிவில் ரூ. 2,000 பிளாட் டிஸ்கவுன்ட்டை வழங்குகிறது. இந்த ஆஃபரை யார் வேண்டுமானாலும் பெறலாம் மற்றும் டிஸ்கவுன்ட் ரேட் செக்அவுட் பேஜில் டிஸ்ப்ளே ஆகும். இந்த கூப்பன் மூலம் OnePlus 12R மொபைலின் விலை ரூ.37,998-ஆக குறையும். இந்த விலை OnePlus 12R மொபைலின் 128GB ஸ்டோரேஜிற்கானது.
அதே போல ரிலையன்ஸ் டிஜிட்டல் OnePlus 12R மொபைலை ரூ.39,999-க்கு விற்பனை செய்கிறது. ஆனால் யூசர் இந்த மொபைலை Cart-ல் சேர்த்த பிறகு அல்லது Buy Now பட்டனை கிளிக் செய்த பிறகு ரூ.2,000 தள்ளுபடியைப் பெறலாம் என்று அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் செலுத்துவதற்கு நீங்கள் தேர்ந்தெடுக்கும் பேங்க் கார்டை பொறுத்து ரூ.3,500 வரை தள்ளுபடி சலுகையும் உள்ளது, இதன் மூலம் OnePlus 12R-ன் விலை மேலும் குறையும்.
ரூ.40,000-த்திற்குள் கிடைக்கும் நல்ல டிவைஸ் OnePlus 12R:
OnePlus 12R மொபைல் 6.78-இன்ச் மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது 4-வது ஜென் LTPO டெக்னாலஜிக்கான சப்போர்ட்டுடன் வருகிறது, எனவே டிவைஸ் தானாகவே 1Hz முதல் 120Hz வரை டிஸ்ப்ளேவின் ரெஃபரஷ் ரேட்டை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறது. நான்-டிமாண்டிங் ஆப்ஸ்கள் டிவைஸில் ஓபனில் இருக்கும் போது, ரெஃபரஷ் ரேட்டை1Hz அல்லது 10Hz-ஆக குறைப்பதன் மூலம் பேட்டரி லைஃபை சேமிக்க உதவுகிறது. மேலும் இந்த டிவைஸின் டிஸ்ப்ளேவிற்கு நிறுவனம் 4,500nits பீக் பிரைட்னஸ் சப்போர்ட்டை கொடுத்துள்ளது. எனவே நேரடி சூரிய ஒளியில் கூட மொபைல் டிஸ்ப்ளே கன்டென்ட் பார்ப்பதற்கு கிளியராக தெரியும்.
Also Read |
உலகின் மிகப் பிரபலமான ஸ்மார்ட்போன் எது தெரியுமா? அறிக்கை சொல்லும் தகவல்கள்!
கைகள் ஈரமாக இருந்தாலும் மொபைலை பயன்படுத்த ஏதுவாக அக்வா டச் டெக்னலாஜி சப்போர்ட்டும் இதில் உள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் நல்ல கேமிங் செயல்திறனை வழங்க கூடிய Snapdragon 8 Gen 2 ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. 5,500mAh பேட்டரியை கொண்டுள்ள இந்த மொபைலோடு ஒரு ஃபாஸ்ட் சார்ஜரை நிறுவனம் கொடுக்கிறது. ரூ.40,000-க்கு குறைவான விலையில் நல்ல சாஃப்ட்வேர் சப்போர்ட் , சிறந்த கேமரா செயல்திறன் மற்றும் IP64 ரேட்டிங் உள்ளிட்டவை கிடைக்கும் மொபைலை வாங்க விரும்புவோருக்கு இந்த மொபைல் சிறந்த ஆப்ஷன் ஆகும்.
.