குளிர்பானங்கள், சிகரெட், புகையிலை மற்றும் அது தொடர்புடைய பொருட்களுக்கான GST வரியை 28 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீகார் துணை முதலமைச்சரான சம்ராத் சவுத்ரியின் கீழ் அமைச்சர்கள் குழு (GoM) வரி விகிதங்களை நெறிப்படுத்துவதற்கு முடிவு செய்தது. அவர்களின் முடிவின்படி, 1500 ரூபாய் வரை விலை கொண்ட ரெடிமேட் ஆடைகளுக்கு 5% GST வரியும், 1500 முதல் 10,000 ரூபாய் வரையிலான ரெடிமேட் ஆடைகளுக்கு 18 சதவீத GST வரியும், 10,000 ரூபாய்க்கு மேலான ஆடைகளுக்கு 28% GST வரையும் முன்மொழியப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதன்படி 148 பொருட்களுக்கு அமைச்சர்கள் குழு GST வரி விகிதத்தை அதிகரிப்பது குறித்து GST கவுன்சிலுக்கு பரிந்துரை செய்ய இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் அரசுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

வருகிற டிசம்பர் 21ஆம் தேதி அன்று மத்திய நிதி அமைச்சர் மற்றும் அந்தந்த மாநில நிதி அமைச்சர்கள் இணைந்து இந்த GST வரி குறித்த விவாதத்தில் ஈடுபட உள்ளனர். அன்று GST வரி மாற்றங்களுக்கான இறுதி முடிவு எடுக்கப்படும். புகையிலை மற்றும் அது தொடர்பான பொருட்கள், குளிர்பானங்களுக்கு 35 சதவீதம் என்ற சிறப்பு விகிதத்தை வழங்குவதற்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே உள்ள 5, 12, 18 மற்றும் 28% நான்கு டயர் வரி வரம்பு தொடர்ந்து நீடிக்கும் என்றும், 35 சதவீதம் என்ற புதிய விகிதத்தை அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்ய உள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
ரூ.65 சம்பளத்திற்கு வாழ்க்கையை தொடங்கியவர்… இன்று ரூ.23,416 கோடி மதிப்பு நிறுவனத்திற்கு தலைவர்… யார் அவர்?

தற்போதுள்ள வரி அமைப்புப்படி, 5, 12, 18 மற்றும் 28% GST வரி வரம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. GSTன் கீழ் அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது அல்லது குறைந்தபட்ச வரி வசூல் செய்யப்படுகிறது. அதே சமயத்தில் ஆடம்பர பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. கார், வாஷிங் மெஷின் போன்ற ஆடம்பர பொருட்களுக்கும், குளிர்பானங்கள் மற்றும் புகையிலை தொடர்புடைய பொருட்களுக்கும் 28% வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது.

விளம்பரம்

அக்டோபர் மாதம் நடந்த சந்திப்பின்போது 20 லிட்டர் வாட்டர் கேனுக்கான GST வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குழு பரிந்துரை செய்தது. மேலும் 10,000 ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட பைசைக்கிள்களுக்கான GST வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்றும் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்யப்படவுள்ளது.

இதையும் படிக்க:
கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன…? அது எப்படி கணக்கீடு செய்யப்படுகிறது…? விளக்கமான தகவல்கள்!!!

விளம்பரம்

அடுத்தபடியாக நோட்டு புத்தகங்களுக்கான GST வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதம் ஆகவும், 15,000 ரூபாயை விட அதிகமாக விற்பனையாகும் ஷூக்களுக்கான GST 28%ல் இருந்து 18% ஆகவும் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் 25,000 ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட கை கடிகாரங்களுக்கான GST வரி 18 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்று கடந்த அக்டோபர் 19ஆம் தேதி நடந்த சந்திப்பின்போது பரிந்துரை செய்யப்பட்டது.

.



Source link