Last Updated:
பிக்சல் 9a ஆனது 1080 x 2424 ரெசலூஷன் உடன் 6.285 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் உடன் 120Hz பேனலைக் கொண்டிருக்கும். இதன் மூலம், ஸ்க்ரோலிங் செய்வதிலிருந்து அனிமேஷன்களைப் பார்ப்பது வரை சிறந்த அனுபவத்தைப் பெறுவீர்கள்.
கூகுளின் புதிய மிட்-ரேஞ்ச் போனான பிக்சல் 9a பற்றிய தகவல்கள் நீண்ட நாட்களாக வெளிவந்த நிலையில், தற்போது ஒரு புதிய அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் போனின் விலை, நிறம் மற்றும் பிற விவரக்குறிப்புகள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அறிக்கையின்படி, கூகுள் பிக்சல் 9a மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கூகுளின் டென்சர் ஜி4 சிப்செட் இதில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது, இது பிக்சல் 9 லைன்அப்-இன் பிற ஸ்மார்ட்போன்களில் காணப்படுகிறது.
இதன் பொருள் வரவிருக்கும் ஸ்மார்ட்போன்கள் தினசரி செயல்பாடுகள் மற்றும் கேமிங் மற்றும் ஹெவி டூட்டி ஆப்ஸ் போன்றவற்றை எளிதாகக் கையாளும். இந்த போனில் 8ஜிபி LPDDR5X ரேம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மல்டி டாஸ்கிங்கை எளிதாக்கும். கூடுதலாக, 128GB மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ்-இன் விருப்பங்களை வழங்குகிறது. எனவே இதனை தேவைக்கேற்ப தேர்வு செய்யலாம்.
பிக்சல் 9a ஆனது 1080 x 2424 ரெசலூஷன் உடன் 6.285 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் உடன் 120Hz பேனலைக் கொண்டிருக்கும். இதன் மூலம், ஸ்க்ரோலிங் செய்வதிலிருந்து அனிமேஷன்களைப் பார்ப்பது வரை சிறந்த அனுபவத்தைப் பெறுவீர்கள். டிஸ்பிளே பிரைட்னஸ் பற்றி பேசுகையில், கூகுள் 2,700 நிட்ஸ் பீக் பிரைட்நெஸ், மற்றும் 1,800 நிட்ஸ் HDR பிரைட்நெஸ் ஆகியவற்றை கொடுக்கும். இதனால் சூரிய ஒளியின் போது கூட ஸ்கிரீன்-ஐ பார்ப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. இதில் ஸ்கிரீன் பாதுகாப்புக்காக 3 கொரில்லா கிளாஸ் இருக்கும்.
கேமராவை பொறுத்தவரை கூகுள் பிக்சல் 9a டூயல் கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும். இது 48MP பிரைமரி மற்றும் 13MP அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டிருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்காக 13MP அல்ட்ரா-வைட் சென்சார் ஃபிரன்ட் கேமராவைக் கொண்டிருக்கும். கேமரா அம்சங்களின் பட்டியலில் நைட் சைட், ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி, சூப்பர் ரெசல்யூஷன் ஜூம் போன்றவை அடங்கும்.
இது தவிர பிக்சல் 9a ஸ்மார்ட்போனில் 5,100mAh சக்திவாய்ந்த பேட்டரியைக் கொண்டிருக்கும். இது 23W வயர்டு மற்றும் 7.5W வயர்லெஸ் ஆதரவுடன் சார்ஜ் செய்யும். இந்த போன் தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பதற்காக IP68 மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது அப்சிடியன், பீங்கான், ஐரிஸ் மற்றும் பியோனி உள்ளிட்ட 4 வண்ண வகைகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 15 இல் இயங்கும் என்றும், 7 ஆண்டுகளுக்கு மென்பொருள் மற்றும் பாதுகாப்பு அப்டேட் பெறும் என்று கூறப்படுகிறது.
இதன் விலை 128ஜிபி மாடலுக்கு ரூ.42,300 முதல் தொடங்கி ரூ.46,500 வரை செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் போது அதன் விலையில் வித்தியாசம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
December 22, 2024 8:21 AM IST