கேம் பிரியர்களுக்கான அட்டகாசமான ஹெட்செட்களை சோனி இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

சோனி தன்னை பெருமைப்படுத்திக் விதமாக ஹிட்டன் மைக்ரோஃபோன் மற்றும் துணை சார்ஜிங் கேஸுடன் ஆகியவற்றையும் இந்த ஹெட்செட்டுடன் இணைத்துள்ளது. சோனி பிளேஸ்டேஷன் பல்ஸ் எக்ஸ்ப்ளோர் வயர்லெஸ் இயர்பட்ஸ் (Pulse Explore Wireless Earbuds) மற்றும் பல்ஸ் எலைட் ஒயர்லெஸ் ஹெட்செட் (Pulse Elite Wireless Headset) ஆகிய இரண்டு புதிய கேமிங் ஆடியோ உபகரணங்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஹெட்செட்கள் நாடு முழுவதும் உள்ள கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப உயர்மட்ட வசதியை வழங்குவதன் மூலம் மேம்பட்ட கேமிங் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு கேமிங் ஹெட்செட்களும் பிளேஸ்டேஷன் லிங்க் ஒயர்லெஸ் இணைப்புடன் (PlayStation Link wireless connection) வருகின்றன. எனவே இது பிளேஸ்டேஷன் கன்சோல்களுடன் விரைவான இணைப்பை உருவாக்க வழிசெய்கிறது. இந்திய சந்தையில் தற்போது அறிமுகமாகவிருக்கும் இந்த ஹெட்செட்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலகளவில் வெளியானது.

விளம்பரம்

விலை எவ்வளவு? :

இந்தியாவில், பல்ஸ் எக்ஸ்ப்ளோர் வயர்லெஸ் இயர்பட்ஸ் ரூ.18,990-க்கு கிடைக்கும். அதேநேரத்தில், பல்ஸ் எலைட் ஒயர்லெஸ் ஹெட்செட் ரூ.12,990 விலையில் கிடைக்கும் என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன? :

பல்ஸ் எக்ஸ்ப்ளோர் ஒயர்லெஸ் இயர்பட்கள் வீட்டிலும், பயணத்தின் போதும் சிறப்பான கேமிங் ஆடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பிளானர் மேக்னடிக் டிரைவர்கள் (planar magnetic drivers) பொருத்தப்பட்ட இந்த ஹெட்செட்கள், கேமிங் பிரியர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. குறிப்பாக, இந்த ஹெட்செட்கள் கேம்களில் உயர் ஒலி தரத்தை வழங்குகின்றன மற்றும் ஒவ்வொரு சிறிய விவரத்தையும் தெளிவாக இதில் கேட்க முடியும் என்பதே இதன் சிறப்பம்சம்.

விளம்பரம்

இதையும் படிங்க : புதிய ஹவாய் GT5 ஸ்மார்ட்வாட்ச்சில் இவ்வளவு வசதிகள் இருக்கா..? விலை எவ்வளவு தெரியுமா?

இந்த இயர்பட்களில் பிளேஸ்டேஷன் லிங்க் ஒயர்லெஸ் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளதால், இது தாமதமின்றி தெளிவான மற்றும் வேகமான ஒலியை வழங்குவதுடன், தடையில்லாத இணைப்பையும் உறுதி செய்கிறது. மேலும் சோனி தன்னை பெருமைப்படுத்திக் விதமாக ஹிட்டன் மைக்ரோஃபோன் மற்றும் துணை சார்ஜிங் கேஸ் ஆகியவையும் இணைத்துள்ளது. ஏஐ தொழில்நுட்பம் எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும், இந்த புதிய தொழில்நுட்பம் பயனர்களுக்கு தேவையற்ற சத்தங்களை பிரிக்கவும், அகற்றவும் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது.

விளம்பரம்

பல்ஸ் எக்ஸ்ப்ளோர் ஒயர்லெஸ் இயர்பட்கள், கணினி, பிஎஸ்5 கன்சோல்கள் மற்றும் மேக்களுடன் பயன்படுத்தக்கூடிய பிளேஸ்டேஷன் லிங்க் யூஎஸ்பி அடாப்டருடன் வருகிறது. தேவையெனில் கூடுதல் அடாப்டர்களையும் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். இது கூடுதல் வசதியாக, குறிப்பிட்ட சாதனங்களில் மின்னல் வேகமான, இழப்பற்ற ஆடியோ இணைப்பை வழங்குவதை எளிதாக்குகிறது. பல்ஸ் எக்ஸ்ப்ளோர் ஒயர்லெஸ் இயர்பட்கள் மூலம், பயனர்கள் 5 மணிநேர பேட்டரி ஆயுளையும், சேர்க்கப்பட்ட சார்ஜிங் கேஸ் மூலம் கூடுதலாக 10 மணிநேர பேட்டரி ஆயுளையும் பெற முடியும்.

விளம்பரம்
மொபைல் சார்ஜரில் உள்ள இந்த குறியீடுகள் எதற்காக தெரியுமா.?


மொபைல் சார்ஜரில் உள்ள இந்த குறியீடுகள் எதற்காக தெரியுமா.?

மறுபுறம், பல்ஸ் எலைட் ஒயர்லெஸ் ஹெட்செட்டில், AI மூலம் மேம்படுத்தப்பட்ட நாய்ஸ் ரிஜெக்‌ஷன் மற்றும் உள்ளமைக்கப்பட்ட மைக்ரோஃபோன் மற்றும் நீண்ட ஆயுள் பேட்டரி ஆகியவை நீண்ட கேமிங்குக்கு வசதியாக உள்ளது. இந்த ஹெட்செட் விரைவான சார்ஜிங் அம்சத்துடன் 30 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

ஒயர்லெஸ் ஹெட்செட்டில் இடம்பெற்றிருக்கும் பிளானர் மேக்னடிக் டிரைவர்கள், பிரீமியம் கேமிங் ஆடியோ அனுபவத்தை வழங்குவதாக உறுதிப்படுத்துகிறது. மேலும் தடையற்ற, உயர்தர இணைப்பிற்கு ப்ளேஸ்டேஷன் லிங்க் ஒயர்லெஸ் இணைப்புக்கு ஒரு முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது. கேமிங்கின் போது ஒலியின் தரம் தங்குதடையின்றி வழங்கப்படுவதையும் இது உறுதி செய்கிறது.

விளம்பரம்

.



Source link