அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சென்ற இடத்தில் கேள்விகளை புறந்தள்ளிவிட்டு முன்னாள் அதிபர் டிரம்ப் உற்சாகமாக நடனமாடினார்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த வாக்கு சேதரிப்பு கூட்டத்தின்போது கூட்டத்தில் இருந்த இருவர் மயங்கி விழுந்தனர். அப்போது கேள்விகளை கேட்ட பொதுமக்களை உதாசினப்படுத்தும் வகையில் டிரம்ப் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் கேள்விகளை விடுங்கள் நடனமாடலாம் என்று கூறி மேடையில் 40 நிமிடங்கள் வரை சிறு சிறு நடன அசைவுகளை டிரம்ப் செய்தார்.

இதனை விமர்சித்துள்ள பிரதான போட்டியாளரான தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் , முன்னாள் அதிபர் டிரம்புக்கு மன பிறழ்வு ஏற்பட்டு நிலையாக இல்லை என்று சாடியுள்ளார்.

விளம்பரம்

தாம் மருத்துவ ரீதியில் முழு உடல் தகுதியுடன் இருக்கும் நிலையில் டிரம்ப் ஏன் தனது மருத்துவ சான்றை வெளியிடவில்லை என்றும் கமலா ஹாரிஸ் கேள்வி எழுப்பினார்

.

  • First Published :





Source link