இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்ததாரர்கள் மூலம் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிலித்தார்.



Source link