உலக மக்களை கடுமையாக அச்சுறுத்திய கொரோனா தொற்றை நினைவுகூரும் வகையில் வியட்நாமில் உருவாக்கப்பட்டுள்ள தீம் பார்க் உலக பிரபலம் அடைந்துள்ளது.
உலக மக்களை இரண்டு ஆண்டுகள் பாடாய்படுத்திய கொரோனாவை பழி தீர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பவரா.?அப்படி என்றால் நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய இடம் வியட்நாம். அண்மையில் லண்டனைச் சேர்ந்த எலா ரிபக் என்ற 29 வயது சுற்றுலா பயணி, வியட்நாம் சென்றிருந்தார். அப்போது அங்கு அவர் காட்சிப்படுத்திய தீம் பார்க் ஒன்று இணையதள வாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தெற்கு வியட்நாமில் உள்ள Tuyen Lam ஏரி தேசிய சுற்றுலா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தீம் பார்க்கின் கருப்பொருள் கொரோனா. ஆம் நீங்கள் கேட்பது உண்மைதான். உலகின் பெரும் தொற்றாக கொரோனா பரவிய சமயத்தில் மக்களுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை பிரதிபலிக்கும் வகையிலும் கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை விவரிக்கும் வகையிலும் இந்த தீம் பார்க் அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மரம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ள கடிகாரத்தில் எண்களுக்கு பதிலாக கொரோனா வில் இருந்து தற்காத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வரையப்பட்டிருந்தன. இதே போல் கொடூர கொரோனாவை கொஞ்சம் இம்சித்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டும் வகையிலான இருக்கைகளும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. பெரிய சிரஞ்சி மூலம் கொரோனாகளுக்கு ஊசி குத்துவது போன்றும் சிறையில் கொரோனாவை அடைப்பது போன்றதுமான உருவ அமைப்புகளும் காண்போரை மிக ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
பல தாசப்தங்களுக்குப் பிறகு உலகையே ஒரு புரட்டுப் புரட்டிய கொரோனாவை காலம் காலமாக மக்கள் நினைவில் வைத்துக்கொள்ளவும் மக்கள் நோய் கிருமிகளிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் இதுபோன்ற தீம் பார்க் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
.
- First Published :