Last Updated:

New Epidemic in China | சீனாவில் ஒரு புதிய தொற்றுநோய் பரவுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அதில், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வருவதாகவும், தகனக் கூடங்கள் நிரம்பி வழிவதாகவும் செய்திகள் பரவின.

News18

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் புதிய தொற்றுநோய் பரவுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுதொடர்பாக எந்த தகவலும் தற்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சீனாவில் புதிய தொற்று நோய்?

சமீபத்தில், சீனாவில் ஒரு “புதிய தொற்றுநோய்” பரவுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. அதில், சீனாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வருவதாகவும், தகனக் கூடங்கள் நிரம்பி வழிவதாகவும் செய்திகள் பரவின. இன்ஃப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ்கள் வேகமாகப் பரவுவதாக கூறப்பட்டது. மேலும், மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவது போன்ற வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, சீனாவில் அவசர நிலை அறிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல்… டிரம்ப் ஹோட்டல் வெளியே வெடித்த டெஸ்லா வாகனம்

சீனாவில் என்ன நடக்கிறது?

இருப்பினும், இது தொடர்பாக தற்போது வரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோன்று, சீன சுகாதார அதிகாரிகளோ அல்லது உலக சுகாதார நிறுவனமோ (WHO) தொற்றுநோய் மற்றும் அவசர நிலை குறித்து உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், தொற்று நோய் காரணமாக மருத்துவமனைகள் மற்றும் தகனக் கூடங்கள் நிரம்பி வழிவதாகவும், இன்ஃப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ்கள் சீனா முழுவதும் வேகமாகப் பரவி வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும், இந்த புதிய தொற்றுநோய் குழந்தைகள் மற்றும் முதியவர்களை தாக்குவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

தமிழ் செய்திகள்/உலகம்/

New Epidemic in China: கொரோனாவை தொடர்ந்து சீனாவில் புதிய தொற்றுநோய் பரவல்? குழந்தைகள், முதியவர்களை தாக்குகிறதா?



Source link