கனமபெல்ல ஸ்ரீ சுமனாராம விகாரையின், கங்காரோஹண மஹா பெரஹெர ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்தி பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

குறித்த பெரஹெர இன்று (29) இரவு 09.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 01.00 மணி வரை வீதி உலா வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, பெரஹெர நிகழ்வின் போது மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகள் மற்றும் பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

கொழும்பில் இருந்து அவிசாவளை, இரத்தினபுரி மற்றும் ஹட்டன் நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கு கொஸ்கம கலுஅக்கல சந்தியில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் வலதுபுறமாக லபுகம வீதியில் 12 கிலோமீற்றர் பயணித்த பின் தும்மோதர சந்தியில் இடது புறமாக திரும்பி தும்மோதர – அவிசாவளை வீதியில் 8 கிலோமீற்றர் பயணித்த பின்னர் புவக்பிட்டிய சந்தியில் வலதுபுறம் திரும்புவதன் ஊடாக பிரதான வீதிக்குள் பிரவேசிக்கலாம்.

The post கொழும்பு – அவிசாவளை வீதியில் போக்குவரத்து மட்டு appeared first on Daily Ceylon.



Source link