கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த துறைமுகங்கள், விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ருவன் கொடிதுவக்கு தெரிவித்தார்.
இதனிடையே, அதானி நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் மேற்கு முனைய அபிவிருத்தி பணிகளை அடுத்த மாதத்திற்குள் நிறைவு செய்ய முடியுமெனவும் அவர் கூறினார்.