ஆபிரிக்க நாடான கொங்கோ குடியரசின் மிகப்பெரிய நகரான கோமாவினை அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதனால் அங்கிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வௌியேறியுள்ள நிலையில் குறித்த பிராந்தியத்தில் யுத்த நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
தாக்குதல் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவும் கொங்கோ அரச படைகளை சரணடையுமாறு கிளர்ச்சியாளர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடதக்கது.