விராட் கோலியை தவிர மற்ற வீரர்களை பெங்களூரு அணி கழற்றிவிட வேண்டும் என்று முன்னாள் வீரர் ஆர்.பி. சிங் தெரிவித்துள்ளார்.
18வது ஐபிஎல் சீசனுக்கான வீரர்களின் ஏலம் நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ளது. மெகா ஏலம் என்பதால் ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கப் போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. அதற்கேற்ப தற்போது திருத்தப்பட்ட ஐபிஎல் விதிகளும் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்க வைக்கலாம் என்கிறது ஐபிஎல் நிர்வாகம். அந்த ஐந்து வீரர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய ஊதிய விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் வீரர்களை ஏலம் எடுப்பது தொடர்பாக சில ஆலோசனைகளை முன்னாள் வீரர் ஆர்.பி. சிங்.
மெகா ஏலத்தில் பெங்களூரு அணிக்கு பெரிதாக சவால் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என ஆர்.பி. சிங் கூறியுள்ளார்.
எனினும், விராட் கோலியை தக்கவைத்து விட்டு மற்ற அனைத்து வீரர்களையும் பெங்களூரு அணி கழற்றிவிட வேண்டும் என்று ஆர்.பி. சிங் அட்வைஸ் செய்துள்ளார்.
அப்படி செய்வதன் மூலம் ஆர்டிஎம் கார்டு மூலம் தேவையான வீரர்களை குறைந்த தொகைக்கு ஏலம் எடுக்க முடியும் என்றும் ஆர்.பி. சிங் ஐடியா கொடுத்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் சிராஜை அப்படி விடுவித்து ஆர்டிஎம் மூலம் தக்கவைக்க வேண்டும். ஏனென்றால், அவருக்கு ரூ.14 கோடி கொடுக்கப்படுகிறது. ஏலத்தில் அவர் அவ்வளவு விலைக்கு போகமாட்டார் என ஆர்.பி. சிங் கூறியுள்ளார்.
இதையும் படிங்க |
ENG vs AUD ODI : விராட் கோலியின் சாதனையை முறியடித்த இங்கிலாந்து இளம் பேட்ஸ்மேன்…
பெங்களூரு அணி புதிய மனநிலையுடன் ஏலத்துக்கு செல்ல வேண்டும். விராட் கோலியை சுற்றியே அணியை கட்டமைக்க வேண்டும் எனவும் ஆர்.பி. சிங் தெரிவித்தார்.
விராட் கோலியை தவிர மற்ற வீரர்களின் தொகை ரூ.18 கோடி, ரூ.14 கோடி என இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ஆர்.பி. சிங் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
.