Last Updated:
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த வீரர்களை இந்தியா கொண்டுள்ளது. – ஹென்றி ஓலங்கா
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பிரபல வேகப்பந்து வீச்சாளராக இருந்த வீரர் தற்போது பகுதி நேர பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளில் திறமை வாய்ந்த நாடாக ஜிம்பாப்வே கருதப்படுகிறது. இந்த நாட்டிலிருந்து கிரிக்கெட் விளையாடிய பல வீரர்கள் இன்று உலகின் பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகின்றனர்.
ஜிம்பாப்வே நாட்டிற்காக 1995 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை வேகப்பந்து வீச்சாளராக திறமையாக செயல்பட்டவர் ஹென்றி ஓலங்கா. இவர் அந்த அணிக்காக 30 டெஸ்ட், 49 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 126 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தற்போது அவர் பகுதி நேர பெயின்டராக பணியாற்றி வருகிறார். சமூக நோக்கம் கொண்ட நிகழ்ச்சிகளுக்கு பெயின்டிங் செய்து கொடுக்கிறார் ஹென்றி ஓலங்கா.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த அடிலெய்டு டெஸ்ட் போட்டியின்போது, இடையே ஓலங்காவின் வீடியோ காட்சிகள் இடம்பெற்றன. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண்ணை திருமணம் முடிந்த அவருக்கு 2 குழந்தைகள் உள்ளன.
ஓலங்கா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
ஆஸ்திரேலியாவில் வாழ்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இங்கு புது வாழ்க்கையை ஆரம்பித்துள்ளேன். நான் சிராஜ் மற்றும் பும்ராவின் ரசிகன். பும்ராதான் சிறந்த பவுலர்.
அவரது பந்து வீச்சு தனித்துவம் வாய்ந்தது. மணிக்கட்டை பயன்படுத்தி அற்புதமாக பந்து வீசுகிறார். பும்ரா எனக்கு வாசிம் அக்ரமை நினைவுபடுத்துகிறார்.
நான் விளையாடும்போது இந்தியாவில் ஸ்பின் பவுலர்கள்தான் அதிகம் இருந்தனர். இப்போது மணிக்கு 140 கிலோ மீட்டருக்கும் மேல் பந்து வீச்சும் பவுலர்கள் அதிகம் உள்ளனர். பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறந்த வீரர்களை இந்தியா கொண்டுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் அற்புதமாக பந்து வீசுகிறார். என்று தெரிவித்தார்
December 10, 2024 9:45 PM IST