Last Updated:

Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம்சாட்டி பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

சந்திரமுகி படத்தில் ரஜினியுடன் நயன்தாரா

சந்திரமுகி படக் காட்சியை தனது திருமண வீடியோவில் நயன்தாரா அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும், இதனால் அவரிடம் தயாரிப்பு நிறுவனம் ரூ. 5 கோடி கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இன்று தகவல்கள் பரவின.

இந்நிலையில், நயன்தாரா தரப்பிலிருந்து சந்திரமுகி பட தயாரிப்பு நிறுவனம் அளித்த தடையில்ல சான்றிதழ் (NOC) தற்போது வெளியிடப்படுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வீடியோ 2 ஆண்டுகளுக்கு பின் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. வெறுமனே திருமண வீடியோவாக இல்லாமல், “Nayanthara: Beyond the Fairy Tale” என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியானது.

Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்தின் முன்னோட்டத்தில் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டதாக தனுஷ் மீது நயன்தாரா குற்றம்சாட்டி பகிரங்க கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் நயன்தாராவின் குற்றச்சாட்டுக்கு தனுஷ் பதில் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதே ஆவணப்படத்தில் ‘சந்திரமுகி’ படத்தின் காட்சிகள் பயன்படுத்தியுள்ளதாக கூறி, ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக இன்று காலை தகவல்கள் பரவின.

இதையும் படிங்க – ‘மலையாள சினிமாவில் அறிவுத் திறன் அதிகம் உள்ளது’ – IDENTITY படத்தை புகழ்ந்து பேசிய த்ரிஷா

இந்நிலையில் சந்திரமுகி பட தயாரிப்பு நிறுவனமான சிவாஜி புரொடக்சன்ஸ் வழங்கியதா தடையில்லா சான்றிதழ் NOC  யை நயன்தாரா தரப்பிலிருந்து வெளியிட்டுள்ளனர்.



Source link