சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 2 நாட்கள் நடைபெற்ற சென்னை மாவட்ட தடகள மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது . இதில் 30 வயது முதல் 95 வயது வரை உள்ளவர் கலந்து கொண்டு ஓடினர்.
சிறப்பு விருந்தினராக நடிகரும் இயக்குனருமான S.J.சூர்யா, நடிகர் சித்தார்த், நடிகர் சூரி உள்ளிட்டோர் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் சித்தார்த், நம் எல்லாரும் வாழ்க்கையில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இப்படி போட்டி போட்டு கொண்டு ஓடுவதில்லை. அத்லெடிக்ஸ் என்பது ஒரு தவம். ட்ராக்கில் ஓடுவதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாது. இந்த போட்டியில் கலந்து கொண்டு ஓடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு எனது காரில் ஒரு பாட்டை கேட்டுக் கொண்ட இருந்தேன்
“யார் அந்த பையன் நான் தான்டா அந்த பையன்” என எல்லாரும் என எல்லாரும் போட்டி போட்டு கொண்டு ஓடுகிறார்கள்.
இன்று இந்த ஓட்டப்பந்தய போட்டியில் 600க்கும் மேற்பட்ட பங்கேற்று இருக்கிறார்கள் இந்த 600 ஆயிரம் ஆகும் ஆயிரம் அதற்கு மேல் போட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன், என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகர் சூரி, நியாயமாக பார்த்தால் இந்த நிகழ்ச்சிக்கு கூட்டம் இருந்திருக்க வேண்டும். பொதுவாக எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கூட்டம் கூடும். 30 – 35 வயதுக்குள் ஏற்படும் உடல் பரச்சினைகள் தானாக சரியாகிவிடும். ஆனால் 50 வயதுக்கு மேல் தாண்டி விட்டால் உடல் பிரச்சினைகள் தெரியாதது குறைந்துவிடும். அப்படி இருக்கும் சமயத்தில் இங்கே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓடுவதை பார்த்தால் வேற லெவல் ஆக இருக்கிறது. நாம் குடும்பத்திற்காக எவ்வளவு சொத்து செய்கிறோம். ஆனால் அதைவிட ஆரோக்கியம் தான் உண்மையான சொத்து. நம்மகிட்ட மத்த இன்வெஸ்ட்மென்ட் வரும் போகும். ஆனால் போன வராது, ஒரே இன்வெஸ்ட்மென்ட் ஆரோக்கியம் மட்டும்தான் என்றார்.
இதையும் படிங்க – பிரபல இந்தி நடிகரை அழ வைத்த மெய்யழகன் திரைப்படம்!! வைரலாகும் பதிவு…
நடிகரும் இயக்குனருமான எஸ் ஜே சூர்யா பேசுகையில், சந்தோஷம் என்பது காசு பணத்தில் இல்லை. நமது உடல் ஆரோக்கியத்தில் தான் இருக்கிறது. நமது உடல் தான் கோயில். அதை எப்படி சுத்தமாக வைப்பது உடற்பயிற்சியில் தான் மட்டுமே முடியும் என்றார்
.