இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் சியோமியின் சமீபத்திய அறிவிப்பு, அதன் டேப் பயனர்களை அதிருப்தி அடையச் செய்திருக்கிறது. சியோமி நிறுவனம், கடந்த 2023ஆம் ஆண்டில் அதன் சியோமி பேட் 6 ஆண்ட்ராய்டு டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த டேப்லெட்டுக்கு இரண்டு அதிகாரப்பூர்வ ஆண்ட்ராய்டு அப்கிரேடுகள் வழங்கப்படும் என்று நிறுவனம் அப்போது அறிவித்திருந்தது. ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் புதிய தகவல்களின்படி, சியோமி பேட் 6 டேப்லெட்டுக்கு, நிறுவனத்திடமிருந்து புதிய ஹைப்பர்ஓஎஸ் வெர்ஷனில் ஒரு பெரிய ஓஎஸ் அப்கிரேடு மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கின்றன.
பேட் 6 டேப்லெட்டை வாங்கியவர்களுக்கு இந்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக பகிரப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். முதலில் இரண்டு அப்கிரேடு வழங்கப்படும் என்று கூறிவிட்டு, தற்போது ஒரு அப்கிரேடை மட்டும் வழங்குவது சரியல்ல என யூசர்கள் சமூக ஊடகங்களில் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சியோமி பேட் 6: திடீர் மாற்றம் ஏன்?
பெரும்பாலான பேட் 6 உரிமையாளர்கள், சியோமி 2 முக்கிய அப்கிரேடுகளை வழங்குவதாக உறுதியளித்துவிட்டு, தற்போது எப்படி இந்த முடிவை எடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். பணம் கொடுத்து பொருளை வாங்கிய பிறகு, அதில் மாற்றம் கொண்டுவருவது சரியானதா என கேட்பது சரிதான் என்பதால், பேட் 6 யூசர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துகள் வந்த வண்ணம் உள்ளன.
சியோமி ஆனது, கடந்த ஒரு வருடத்தில் எம்ஐயூஐ வெர்ஷனில் இருந்து ஹைப்பர்ஓஎஸ்-க்கு மாறியுள்ளது, தற்போதுள்ள அனைத்து மாடல்களும் புதிய யுஐ அப்டேட்டுகளைப் பெறுகின்றன. அந்த வகையில், பேட் 6-க்கும் இந்த அப்டேட் கிடைக்கும். ஆனால், ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனில் மட்டுமே இந்த அப்டேட்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இந்தியாவில் உள்ள அனைத்து யூசர்களுக்கும் கிடைக்கும் வாட்ஸ்அப் பே…! இனி ஈஸியா பணம் அனுப்பலாம்…!
எனினும், ஆண்ட்ராய்டு 15ஐ அடிப்படையாகக் கொண்ட ஹைப்பர்ஓஎஸ் கட்டமைப்பைப் போலவே, பேட் 6 யூசர்கள் இந்த அப்டேட் மூலம் அனைத்து விதமான புதிய அம்சங்களையும் ஆண்ட்ராய்டு 14 -ல் பெற முடியும் என்பதை சியோமி உறுதி செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹைப்பர்ஓஎஸ் 2 வெர்ஷன் மே 2025இல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்பாக சியோமி பேட் 7 சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. இது பெரும்பாலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 சிப் மற்றும் ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான யூஐ உடன் வரும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஸ்மார்ட்ஃபோன் vs சாட்டிலைட் ஃபோன்… வித்தியாசம் என்ன? எப்படி வேலை செய்கின்றன…?
முன்னதாக, சியோமி நிறுவனம் பேட் 6 டேப்லெட்டில் நான்கு ஆண்டுகள் பழைய ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்டைப் பயன்படுத்தி இருந்தது. இது நிறுவனத்திடமிருந்து வரம்பிடப்பட்ட அப்டேட்டை திரும்பப் பெறுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
January 07, 2025 7:02 PM IST