பெரும் சர்ச்சைகளுக்கு இடையே, நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனும் 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னை அருகே மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் பிரமாண்டமாக நடந்த திருமணத்தில் முக்கியமான திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
திருமணத்தின் போது அது குறித்து வீடியோ வெளியாகாத நிலையில், திருமண நிகழ்வுடன் சேர்த்து, நயன்தாரா – விக்னேஷ் சிவனின் காதல் வாழ்க்கை, ‘‘Nayanthara: Beyond the Fairytale’’ என்ற பெயரில் ஆவணப்படமாக தயாரானது.
2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆவணப்படம் வெளியாகாததற்கு, ‘‘நானும் ரவுடிதான்’’ படத்தின் காட்சிகளை பயன்படுத்த, அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் அனுமதிக்கவில்லை என நயன்தாரா குற்றம் சாட்டியிருந்தார்.
Also Read | Kantara – A Legend : காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் தேதி… ஹோம்பலே ஃபிலிம்ஸ் அறிவிப்பு…
மேலும், டிரைலரில் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு தனுஷ் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்த நயன்தாரா, தனுஷை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இது திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படம் வெளியானது.
.