இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கோபத்தில் கூல்ட்ரிங்ஸ் பெட்டியை பேட்டால் அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

புனேவில், நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களும், 2-ஆவது இன்னிங்ஸில் 255 ரன்களும் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடியது.

விளம்பரம்

இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி 40 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தபோது சான்ட்னர் வீசிய பந்து விராட் கோலியின் காலில் பட்டது. இதையடுத்து நியூசிலாந்து வீரர்கள் எல்.பி.டபிள்யூ.  அப்பீல் செய்தனர் .

இதனை ஏற்று அம்பையர் விராட் கோலிக்கு அவுட் கொடுத்தார். இதனை நிராகரிக்கும் வகையில் டிஆர்எஸ் முறைக்கு அப்பீர் செய்தார் விராட் கோலி.

News18

இந்நிலையில், ரிவ்யூவின்போது பந்து ஆப் ஸ்டெம்புக்கு சற்று வெளியே பிட்ச்சாகி இடது ஸ்டம்புக்கு வெளியே செல்வது போன்று காண்பிக்கப்பட்டது. இருப்பினும் விராட் கோலிக்கு அவுட் வழங்கப்பட்டதால் அவர் கடும் விரக்தியில் இருந்தார்.

இதையும் படிங்க – புனே டெஸ்ட் தோல்விக்கு காரணம் என்ன? காரணங்களை அடுக்கிய ரோஹித் சர்மா

பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறிய அவர் செல்லும் வழியில் இருந்த கூல்ட்ரிங்ஸ் பெட்டியை தனது பேட்டால் ஓங்கி அடித்தார். தற்போது இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் விராட் கோலி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

விளம்பரம்

சரியான பார்ட்னர்ஷிப் இல்லாததால் வெற்றி பெற வேண்டிய மேட்ச்சில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

.





Source link