சர்ச்சைக்குரிய eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பான கணக்காய்வு அறிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக டப்ளியூ.பீ.சி.விக்ரமரத்ன தெரிவித்தார்.

இந்த விசாரணைகள் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளதாகவும், பல முறைகேடுகள் தெரியவந்துள்ளதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அந்த பரிவர்த்தனைகள் தொடர்பான நிறுவனங்களிடமிருந்து அறிக்கைகளை அழைக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாக அலுவலகம் கூறுகிறது.

eVisa மற்றும் ePassport பரிவர்த்தனைகள் தொடர்பாக சமீபத்தில் நிறைய சர்ச்சைகள் எழுந்தன.

இதேவேளை, அரச வாகனங்கள் தொடர்பான கணக்காய்வு இந்த நாட்களில் இடம்பெற்று வருவதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் தகவல்களைப் பெற வேண்டியிருப்பதால் விசாரணைக்கு அதிக காலம் எடுக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.



Source link