07
புற்றுநோய் போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சுமையாக மாறியுள்ளது. இதனால், பயோகான் போன்ற பெரிய மருந்து நிறுவனங்கள், சில நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு வரிச் சலுகை அளிக்க அரசுக்கு பரிந்துரைத்தன. நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இதை கருத்தில் கொண்டுள்ளது. ஆகையால், புற்றுநோய் உள்ளிட்ட சில முக்கிய நோய்களுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.