சாம்சங்கின் முதல் ஸ்மார்ட் ரிங் இந்த ஆண்டு ஜூலையில் அறிமுகமான நிலையில், தற்போது இந்திய வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒருவழியாக சாம்சங்கின் கேலக்ஸி ரிங் இந்த வாரம் இந்தியாவில் வெளியாகும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாரிஸில் நடந்த Galaxy Unpacked 2024 நிகழ்வில் கேலக்ஸி ரிங்கை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. பின்னர், இதன் முழுப் பதிப்பையும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. ஆனால் இந்தியாவில் இந்த ரிங் வெளியாகமல் இருந்த நிலையில், தற்போது இந்திய வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

விளம்பரம்

கேலக்ஸி ரிங் என்பது சாம்சங்கின் பிரதான தயாரிப்புகளில் இருந்து மாறுபட்ட, இந்த பிரிவின் முதல் தயாரிப்பு ஆகும். இது ஒரு வார பேட்டரி ஆயுளை கொண்டிருக்கும் என்று சாம்சங் உறுதியளித்துள்ளது. இன்று நீங்கள் வாங்கக்கூடிய பெரும்பாலான ஸ்மார்ட்வாட்ச்களை விட இது சிறந்தது என்றும் கூறுகிறார்கள்.

விலை எவ்வளவு? :

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ரிங்கின் விலை ரூ.38,999 இல் தொடங்குகிறது, அடுத்த சில நாட்களில் இந்தியாவில் இந்த ரிங் விற்பனைக்கு வருகிறது.

சிறப்பம்சங்கள் என்னென்ன? :

விளம்பரம்

கேட்ஜெட் நீடித்து நிலைத்திருக்கும் வகையில், கேலக்ஸி ரிங் டைட்டானியத்தால் செய்யப்பட்டிருப்பதோடு, மூன்று வண்ணங்களிலும் கிடைக்கிறது. இது வெறும் 3 கிராம் வரையிலான எடையில் இருக்கும், குறிப்பாக தூங்கும் போது விரல்களில் அதன் எடையை நீங்கள் உணர மாட்டீர்கள் என்பதை நிறுவனம் உறுதி செய்கிறது.

இதையும் படிங்க : கேம் பிரியர்களுக்கான ஸ்பெஷல் இயர்பட்ஸ்… இந்தியாவில் அறிமுகப்படுத்திய சோனி நிறுவனம்!

இது 10 ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் மதிப்பீட்டுடன் வருகிறது மற்றும் 7 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை உறுதி செய்கிறது. இந்த ரிங்கை நீங்கள் வாங்கும் பட்சத்தில், அதில் ஒரு ஃடாக் அல்லது சாக்கெட்டிற்கு பதிலாக சார்ஜ் செய்வதற்கு ஏதுவாக நீங்கள் ஒரு சார்ஜிங் கேஸைப் பெறுவீர்கள்.

விளம்பரம்

இந்த ரிங் உங்கள் தூக்கததைக் கண்காணிக்கவும், 24 மணிநேர இதயத் துடிப்பைக் கண்காணிக்கவும் மற்றும் உடற்தகுதி சம்பந்தப்பட்ட பிற அம்சங்களைக் கண்காணிக்கவும் உதவுகிறது. இவ்வாறு கண்காணிக்கப்படும் தகவல்கள் இதில் உள்ளமைக்கப்பட்ட ஸ்டோரோஜில் பதிவு செய்யப்படும் மற்றும் ஈரமான சூழலில் பயன்படுத்த ஏதுவாக IP68 மதிப்பீடும் இதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டாவில் வீடியோ பார்க்க பிடிக்கலையா..? உங்களுக்காக சூப்பரான 5 ஆப்ஸ்..


இன்ஸ்டாவில் வீடியோ பார்க்க பிடிக்கலையா..? உங்களுக்காக சூப்பரான 5 ஆப்ஸ்..

எனினும் பெரும்பாலான பயனர்களிடையே உள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், இந்த ரிங்கை பயன்படுத்த சாம்சங் போன் தேவையா அல்லது மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்போனுடன் இதை இணைக்க முடியுமா என்பது தான். அந்த வகையில் நமக்கு கிடைத்திருப்பது நல்ல செய்தி தான். கேலக்ஸி அல்லாத மற்ற ஸ்மார்ட்போன்களுடனும் இந்த ரிங்கை ஃபேர் செய்ய முடியும்.

விளம்பரம்

ஆனால் iOS பயனர்களுக்கு இந்த ரிங் பயனளிக்காது. கேலக்ஸி அல்லாத ஸ்மார்போனைக் காட்டிலும், கேலக்ஸி ஸ்மார்ட்போனில் இதைப் பயன்படுத்தினால், கூடுதல் அம்சங்களை நீங்கள் பெற முடியும். இதற்கு சந்தா ஏதும் இல்லை என்றாலும், அல்ட்ராஹியூமன் ரிங் ஏர், ஓரா மற்றும் உள்ளூர் பிராண்டுகளான நாய்ஸ் மற்றும் பெப்பிள் ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது, நீங்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும்.

.



Source link