Last Updated:

சாம்சங் நிறுவனமானது அதன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது.

News18

தென் கொரிய தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் ஒவ்வொரு பிரிவிலும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் பெயர் பெற்றது. இந்நிலையில் சாம்சங் நிறுவனமானது அதன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. ரூ.1,49,999 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ.72,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, இது 51 சதவிகித விலைக் குறைப்பாகும். இது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி சேமிப்பு கொண்ட வேரியண்ட்-இன் விலையாகும்.

இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு கூடுதலாக பேங்க் டிஸ்கவுண்ட், நோ-காஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆபஃர்களையும் வழங்குகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் விரும்பினால், பழைய போனை மாற்றிக் கொண்டு அதிகபட்சமாக ரூ.27,350 வரையிலான எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியையும் பெறலாம். இந்த எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியின் மதிப்பு பழைய ஃபோனின் மாடல் மற்றும் நிலையைப் பொறுத்தது. இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு நோ-காஸ்ட் EMI விருப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது. கேலக்ஸி S23 அல்ட்ரா போன் ஆனது பாண்டம் பிளாக், கிரீம் மற்றும் கிரீன் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

புதிய விலைகள் மற்றும் சலுகைகள்:

  • சமீபத்திய விலை: ரூ 72,999.
  • அசல் வெளியீட்டு விலை: ரூ 1,49,999.
  • தள்ளுபடி: 51 சதவீதம் விலை குறைப்பு.
  • EMI விருப்பம்: மாதத்திற்கு ரூ.3,539 முதல்.
  • கூடுதல் நன்மைகள்: எக்ஸ்சேஞ்ச் ஆபஃர் மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட்.

சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ராவின் முக்கிய அம்சங்கள்:

டிஸ்பிளே: 6.81-இன்ச் 2X டைனமிக் AMOLED ஸ்கிரீன் 3088 x 1440 பிக்சல்ஸ் ரெசலூஷன்

120Hz ரெஃபிரேஷ் ரேட், 1750 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் மற்றும் இன்-டிஸ்ப்ளே பிங்கர்பிரிண்ட் சென்சார்

செயல்திறன்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது

12 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான OneUI 5 மூலம் இயங்குகிறது.

கேமரா அமைப்பு: குவாட் ரியர் கேமராக்கள்: 200MP OIS கேமரா, 12MP அல்ட்ரா-வைட் சென்சார், 10MP 3x டெலிஃபோட்டோ லென்ஸ், 10MP 10x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்.

ஃபிரன்ட் கேமரா: செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 12MP.

பேட்டரி மற்றும் சார்ஜிங்: 5000mAh பேட்டரி திறன் 45W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது

எஸ் – பென் சப்போர்ட்: இதில் எஸ் – பென் ஆதரவு உள்ளது, இதன் மூலம் நீங்கள் எளிதாக எழுதலாம், டேப் செய்யலாம் அல்லது வரையலாம்.



Source link