Last Updated:

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News18

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்குகிறது.

பாகிஸ்தானில் இந்த போட்டிகள் நடைபெறும் சூழலில் பாதுகாப்பு காரணமாக இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். மொத்தம் 8 அணிகள் மோதும் இந்த போட்டியில் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகளும் பி பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கேப்டனாக ரோஹித் சர்மாவும், துணை கேப்டனாக சுப்மன் கில்லும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தவிர்த்து விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே. எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்திய அணியின் வேகப்பந்து பேச்சாளர் முகமது சமி அணியில் இடம் பிடித்துள்ளார். இதேபோன்று ஸ்ரேயாஸ் ஐயர், மற்றும் கே. எல். ராகுலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிகள் இடம் பெற்றுள்ளார்கள்.

தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக பல ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முகமது சிராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க – உள்ளூர் போட்டிகள் முதல் விளம்பரங்கள் வரை..! வீரர்களுக்கு பிசிசிஐ விதித்த அதிரடி கட்டுப்பாடுகள்

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது.



Source link