ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற உள்ளன. 50 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக இவை நடத்தப்படும். இவற்றில் 8 அணிகள் பங்கேற்கும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையேயான போட்டி துபாயில் பெப்ரவரி 23ம் திகதி நடைபெறும்.

இந்நிலையில், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள் பற்றி பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பகர் சமான் தன்னுடைய கணிப்புகளை வெளியிட்டு உள்ளார். பேட்ஸ்மேனான இவர், 2025-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிகளுக்கான வரிசையில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் உள்ள நிலையில், இறுதி 4 அணிகளுக்கான வரிசையில் ஆசிய நாடுகளே இடம்பெறும் என அவர் கணித்திருக்கிறார்.

இதன்படி, பாகிஸ்தான், இந்தியா, மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என நம்புகிறேன் என யூ-டியூப் சேனல் ஒன்றில் அவர் கூறியுள்ளார்.



Source link