Last Updated:

ICC Champions Trophy | நண்பகல் 12.30 மணிக்கு இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து செய்தியாளர்களிடம் இந்திய அணியை அறிவிப்பார்கள் என்று எதிர்க்கப்படுகிறது.

இந்திய அணி

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப்போகும் இந்திய அணி வீரர்களின் அறிவிப்பு இன்று வெளியாக இருக்கிறது. பிப்ரவரி 19 ஆம் தேதி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன இந்த போட்டித் தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.

இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளைத் தவிர்த்து மற்ற அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. சாம்பியன் டிராஃபி தொடரில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் பங்கேற்பார்கள் என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் சாம்பியன்ஸ் ட்ராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நண்பகல் 12.30 மணிக்கு இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இணைந்து செய்தியாளர்களிடம் இந்திய அணியை அறிவிப்பார்கள் என்று எதிர்க்கப்படுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை ரோகித் சர்மா வழி நடத்த இருக்கிறார். பார்டர் கவாஸ்கர் கோப்பை 5 ஆவது டெஸ்ட் போட்டியின்போது காயமடைந்த பும்ரா, சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.



Source link